images 2023 02 17T110922.662 - 2026

ஆசிரியர்களே இதப்படிங்க முதல்ல..

தமிழகம்
images 2023 02 17T110922.662 - 2026

அடிக்கடி விடுமுறை எடுக்கும் ஆசிரியர் விபரங்கள் உடனே அனுப்பி வைக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது,

தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, தொடக்கப்பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் விடுப்பு சார்ந்து கீழ்காணும் விவரங்களை சேகரித்து அனுப்ப வேண்டும். நீண்ட கால விடுப்பில் உள்ளவர்கள், நீண்ட காலமாக தகவலன்றி பணிக்கு வராதவர்கள், தொடர்ந்து விடுப்பில் உள்ளவர்கள் அடிக்கடி நீண்ட விடுப்பில் உள்ளவர்கள் மேற்காணும் விவரங்களை மிகவும் அவசரம் என கருதி இ-மெயில் மூலம் உடனே அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.