வாக்காளர் அட்டை ஆதார் இணைக்க கால அவகாசம்..

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Published:

500x300 1853747 aadar - 2026

வாக்காளர் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்கும் கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கான கால அவகாசம் அடுத்தாண்டு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வாக்காளரும் தங்களது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

அதன்படி, இந்திய தேர்தல் ஆணையம் இப்பணியை கடந்த 2021ல் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது. வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு இந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் நிறைவடைகிறது.

இந்நிலையில், மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் அட்டையை இணைப்பதற்கான கால அவகாசம் 2024, மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

Related articles

Recent articles

spot_img