‘திராவிட மாடலில்’ தமிழில் 100க்கு 138 மதிப்பெண் பெற்று சாதித்த மாணவி!

marks in tamil
#image_title

திராவிட மாடல் ஆட்சியில், தமிழில் 100க்கு 138 மதிப்பெண் பெற்று மதுரையைச் சேர்ந்த மாணவி சாதனை படைத்துள்ளார். ஆனாலும் அவர் மற்ற நான்கு பாடங்களில் தேர்ச்சி மதிப்பெண்கள் பெற்றிருந்த போதும், ‘தோல்வி’ அடைந்ததாக மதிப்பெண் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளதால் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளார்.

பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு மதிப்பெண் பட்டியலில் தமிழில் 100க்கு 138 மதிப்பெண் என்றும், நான்கு பாடங்களில் தேர்ச்சி மதிப்பெண்களை தோல்வி எனவும் குறிப்பிட்டு இருந்ததால் 600க்கு 514 மதிப்பெண்கள் பெற்றும் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சூரக்குளத்தைச் சேர்ந்த வேல்முருகன் (26) என்பவரது மனைவி ஆர்த்தி (19) ஏமாற்றம் அடைந்துள்ளார்.

கடந்த 2021ல் திருநகர் பள்ளியில் பிளஸ் 1 படித்த ஆர்த்தி, குடும்ப சூழ்நிலை காரணமாக வேல்முருகனைத் திருமணம் செய்துள்ளார். திருமண வாழ்க்கையால் படிப்பு கெட்டு விடக்கூடாது என்பதற்காக ஆர்த்தியை இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வில் நேரடியாக பங்கேற்க வைத்துள்ளார் வேல்முருகன். இந்நிலையில், ஆர்த்தியின் தேர்வு முடிவுகள் வெளியான போது கடும் அதிர்ச்சி அடைந்தார். காரணம் அவர் தமிழில் 100 க்கு 138 மதிப்பெண்கள் பெற்று இருந்ததுடன், மற்ற நான்கு பாடங்களில் தேர்ச்சி மதிப்பெண் பெற்றிருந்தும் அவர் தோல்வி அடைந்ததாக மதிப்பெண் பட்டியலில் குறிப்பிடப்பட்டு இருந்ததுதான்.

மற்ற பாடங்களில் ஆங்கிலம் 92, கணிதம் 56, இயற்பியல் 75, வேதியியல் 71, உயிரியல் 82 மதிப்பெண்கள் பெற்றிருந்தும் அந்தப் பாடங்களில் தாம் தோல்வி அடைந்துள்ளதாக பட்டியலில் குறிப்பிடப் பட்டிருந்ததைப் பார்த்து பெரும் அதிர்ச்சி அடைந்த் ஆர்த்தி, இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து வருத்தம் வெளியிட்டார்.

இது குறித்து அவர் கூறியபோது, மதிப்பெண் பட்டியலில் தமிழில் 100க்கு 138 என பிழையாக குறிப்பிட்டுள்ளனர். நான்கு பாடங்களில் 50க்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்றிருந்தும் அவற்றில் தோல்வி என குறிப்பிட்டுள்ளனர். மாவட்ட கல்வி அலுவலகத்தை தொடர்பு கொண்டேன். இரு நாட்களில் மதிப்பெண் பட்டியல் வந்துவிடும். அதில் தவறாக வந்தால் சரிசெய்ய ஏற்பாடு செய்வோம் என்று கூறியுள்ளனர் என்றார்.

அவரது மதிப்பெண் பட்டியல் சமூகத் தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு திராவிட மாடலே காரணம் என்று கிண்டலும் கேலியும் சமூக தளங்களில் பரவி பெறுகின்றன.

திராவிட மாடலில் தமிழ் வளர்ந்துள்ளது என்பதற்கு இதுவே எடுத்து காட்டு,😂 தமிழக முதல்வர், வருங்கால துணை முதல்வர் சின்னவர் ஆகியோர் ஆர்த்தியை சென்னையில் சந்தித்து சிறப்பு பரிசாக கருணாநிதி ஈவெரா சிலைகளை வழங்குவார்கள் என செய்திகள் தெரிவிக்கின்றன 😂😂 தமிழை வளர்க்க இதுபோல் நூற்றுக்கு 138 மதிப்பெண் வழங்கிய ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது அல்லது அதற்கு மேல் ஏதாவது விருது தருவது குறித்து அன்பில் பொய்மொழியுடன் அவசர ஆலோசனையில் இறங்கி நீச்சலடித்து வருகிறார் 😂 – பசுத்தாய் கணேசன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories