church of india - 2026

என்.ஜி.ஓ.க்கள், கிறிஸ்துவ மிஷினரிகளுக்கு வரும் பணத்தை சட்டத்தின் மூலம் வரையயைப்படுத்தி கட்டுபடுத்தியாகி விட்டதாய் நினைக்கிறோம். ஆனால் சமீபத்தில் வங்கியில் நான் நேர்கண்ட காட்சி திகைக்க வைத்தது.

சில நாட்களுக்கு ஒரு தேசிய வங்கிக்கு சென்ற போது ஒரு வயதான அம்மா என்னிடம் பணம் எடுக்க பாரம் நிரப்பத் தந்தார்கள். ஐம்பதாயிரம் தேவை என கூறினார்கள். ஆனால் அவர்களை பார்த்தால் மிகவும் ஏழ்மை நிலையான பாட்டிதான்.

சரி என அவர் பாஸ்புக்கை பார்த்த போது சில மாதங்களாகவே அவர் அக்கவுண்டில் மாதம் தோறும் 50,60,40 ஆயிரம் என டெப்பாசிட் செய்யப்பட்டதும் இரண்டு நாட்களிலே அந்த பணத்தை முழுமையாக எடுத்ததும் தெரியவந்தது.

சில சந்தேகங்கள் முளைத்தன எனக்கு.! ஒருவேளை அந்த அம்மாவுக்கு பென்சன் பணம் என்றால் அவர்களால் பாரம் கூட நிரப்பத் தெரியவில்லை. பார்க்கும்போது பலவிதத்தில் இயலாமை தெரிந்தது.

ஒரு வேளை அந்த பாட்டியின் கணவர் அரசு உத்தியோகத்தால் வரும் தொகையா அவ்வாறு எனிலும் இவ்வளவு பெரிய தொகை மாதாமாதம் வருவதும் எடுப்பதுமாய் இருந்தது சந்தேகிக்க வைத்தது. அது ஒருவருடைய தனிப்பட்ட விஷயம் என்றும் உதவ வேண்டிய மூதாட்டிக்கு இடையூறு செய்கிறோமோ என்றே நினைத்தாலும் என் வங்கி நண்பரிடம் விசாரித்ததில் அதிர்ச்சியாயிருந்தது.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

அதாவது ஒவ்வொரு கிறிஸ்துவ சபைக்கும் அதில் உள்ள இது போன்ற வயதான நம்பிக்கையான விசுவாசிகளை தேர்ந்து எடுத்து அவர்கள் அக்கவுண்டிற்க்கு மாதாமாதம் தவறாது பணம் வருவதும், சம்பந்தப்பட்டவர்கள் அதை அப்படியே அங்குள்ள சர்ச் பாதிரியாரிடம் பணத்தை ஒப்படைத்துவிடுவார் என்றும்

இதுபோல் எல்லா கிறிஸ்துவ சபைகளிலும் இதுபோன்று கூத்து தொடர்ந்து நடைபெறுகிறது என்றும், இந்த அம்மாவும் நேராக பணத்தை அப்படியே சர்ச் பாதிரியாரிடம் கொடுத்துவிடுவார் என்றும், அதன்மூலம் எப்பொழதும் போல் அவர்கள் ஊழியக்கூட்டங்களுக்கும் பிரச்சாரங்களுக்கும் சுகபோக வாழ்க்கைக்கும் குறுக்கு வழியில் வந்து கொண்டிருப்பதை சொன்ன போது திகைக்க வைத்தது.

சட்டம் மூலம் என்ன தான் இது போன்ற அக்கிரமங்களை கட்டுபடுத்த நினைத்தாலும் கயவர்கள் வயதான ஏழைகளை மதத்தை பயன்படுத்தி அவர்களை பகடை காய்களாக்கி பாதிரிகள் பண மழையில் குதூகலித்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

இதனால் என்ன பிரச்சனை என நாம் சாதாரணமாக எடுக்க முடியாமல் இதன் பின்விளைவுகளை யோசிக்க பகீர் என்றது. இதனால் நம் தேச இறையாண்மையே சிதைந்து விடும்.

ALSO READ:  காணாமல் போன நயா பைசா கணக்கு!

பல சதிகள் இந்த வெளிநாட்டு பண பரிவர்த்தனை மூலம் அரங்கேற வாய்ப்பிருக்கிறது. இதை எச்சரிக்கையுடன் கையாண்டு இதிலுள்ள ஆபத்தை ஆரம்பத்திலேயே வேரோடு களைந்து விபரீதங்களை தவிர்க்க வேண்டும்..

தகவல்: – பாலசுப்பிரமணியம் கிருஷ்ணமூர்த்தி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending