தர்மபுரி அருகே கோயில் விழாவையொட்டி களைகட்டிய மாட்டுச்சந்தை

தர்மபுரி : தமிழக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற அதியமான்கோட்டையில், காளியம்மன் கோயில் விழா துவங்கியதையொட்டி, நேற்று மாட்டு சந்தை கூடியது. வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கில் மாடுகள் விற்பனைக்கு குவிந்ததால் சந்தை களைக்கட்டியது. தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில் பழமையான காளியம்மன் கோயிலில், நேற்று முன்தினம் திருவிழா துவங்கியது. காளியம்மனுக்கு வரும் 30ம் தேதி வரை சிறப்பு அலங்காரத்துடன் பூஜை நடக்கிறது. நேற்று கோயில் தேர் இழுக்கப்பட்டு, ஊரின் அருகே நிலை நிறுத்தப்பட்டது. 3வது நாளாக இன்றும் தேர் இழுக்கப்படுகிறது. விழாவையொட்டி அதியமான்கோட்டையில், 15 நாட்களுக்கு நடக்கும் மாட்டு சந்தை, நேற்று முன்தினம் கூடியது. 2வது நாளாக நேற்று ஆயிரக்கணக்கில் மாடுகள் விற்பனைக்காக குவிந்தன. கர்நாடகா, ஆந்திரா மற்றும் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாடுகள் விற்பனைக்கு வந்துள்ளன. கி5 ஆயிரம் முதல் கி1 லட்சம் வரை பல்வேறு ரகத்தை சேர்ந்த மாடுகள் வந்தன. இதனால் மாட்டுச்சந்தை களைகட்டியது. 08-04-15 Dharmapuri Mattu Sanhai News photo 02 08-04-15 Dharmapuri Mattu Sanhai News photo 01