December 5, 2025, 9:22 PM
26.6 C
Chennai

19 வருடம் வாடகை தராமல் ரூ.45 லட்சம் பாக்கி வைத்த சீமான்! கதறிய வீட்டு ஓனர்!

seeman house2 - 2025

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தான் குடியிருக்கும் வீட்டுக்கு 19 வருடங்களாக வாடகை தராமலும் காலி செய்ய மறுத்தும் வந்த நிலையில் வீட்டு உரிமையாளரான முதியவர் மிகவும் நொந்து நூடுல்ஸ் ஆகி, நீதிமன்றம் சென்று சீமானிடமிருந்து வீட்டை மீட்டுள்ளார்.

இது ஏதோ சினிமா கதை போல் தோன்றினாலும், சினிமா கதைகளையே நிஜ வாழ்க்கையில் நடந்ததாகச் சொல்லும் கற்பனை ஆற்றல் மிக்க சீமான், மேடைக்குக் கீழ் அமர்ந்திருக்கும் தன் ரசிகர்களையே பணம் போட்டு படம் எடுக்கும் பைனான்சியராக எண்ணி, அவர்களுக்கு தனது திரைக்கதைகளை அவிழ்த்து விடுவார். ரசிகர்களும் முழு சினிமா பார்த்த திருப்தியில் சீமானின் கற்பனைப் பேச்சுகளைக் கேட்டு கைதட்டி மகிழ்ச்சியுடன் செல்வர்.

ஆனால், திரைப்படத்தில் அல்லாமல் ஒரு திரைக்கதையை நிஜத்தில் செய்துள்ளார் சீமான்.திரைப்படத்துறையில் உதவி இயக்குநராக இருந்த காலத்தில் இருந்தே சென்னை சாலிகிராமம் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் இருக்கிறார் சீமான். அந்த வீட்டை உரிமயாளர் காலி செய்யச் சொல்லியும் சீமான் மறுத்து விட்டதாகவும், 19 வருடங்களாக 45 லட்ச ரூபாய் வாடகை பாக்கி வைத்திருப்பதாகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

seeman e1538589747761 - 2025

சீமான் பிடியில் இருந்து மீட்கபட்ட வீடு மகிழ்ச்சியில் உரிமையாளர்..!!

வழக்கறிஞர் அண்ணன் Vs Gopu அவர்களுக்கு வாழ்த்துகள்,

இந்த பதிவு சீமானை அசிங்கப்படுத்த அல்ல. இனி ஒரு காலம் இது போன்ற தவறை யாரும் செய்யாதீர்கள் என்பதற்கே.

சீமானின் பிடியிலிருந்து மீட்கப்பட்ட சொத்து.

தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்தில் 19 ஆண்டுகாலமாக நுழைய முடியாமல் பரிதவித்த பெரியவரின் நிம்மதி பெருமூச்சை இன்று கண்டேன்.

ஆனந்த கண்ணீரோடு, அவரது இடத்தில் அங்குமிங்கும் நடந்து பார்த்து பரவசம் அடைந்தபோது என் கண்களும் கலங்கியது.

இத்தனை ஆண்டுகாலமாக 4500000 ற்கு மேல் வாடகை பாக்கி, பல நீதிமன்றங்களில் வழக்கு இழுத்தடிப்பு, உரிமையாளர் உள்ளே நுழைய முடியாதபடியான மிரட்டல்.

ஒருவழியாக இன்று என்னால் அதற்கு தீர்வு கிடைத்தது என நினைக்கும் போது ஒரு வழக்கறிஞராக நான் பெருமிதம் கொள்கிறேன். இத்தனைக்கும் சீமான் அவர் ஒரிஜினல் வாடகைதாரர் அல்ல.

உண்மையான வாடகை தாரரே காலி செய்துவிட்டு சென்ற பிறகு, அவரோடு அவர் உதவி இயக்குனராக தங்கி வாழ்க்கையை ஆரம்பித்த இடத்தை விட்டு இன்றுவரை வெளியேற மறுத்து வந்தார் .

வாடகை நிர்ணயம் செய்த வழக்கில் வெற்றி, வீட்டை காலி செய்ய சொன்ன வழக்கில் வெற்றி, மேல்முறையீடு வழக்கில் வெற்றி, தீர்ப்பை செயல்படுத்தும் வழக்கிலும் இன்று இறுதி வெற்றி.

இன்று இதுவரை தான் செய்த தவறை உணர்ந்து, மனம்திருந்தி வீட்டின் சாவியை நீதிமன்றம் வழியாக உரிமையாளரிடம் ஒப்படைத்தார் நாம் தமிழர் கட்சி சீமான்.

ஒரு பக்கம் அவர் வாழ்ந்து வளர்ந்த வீட்டை, சட்டத்தின் வழியில் பிடுங்கி, உரிமையாளர் வசம் ஒப்படைக்கும்போது சீமானுக்காக சற்று கவலையுற்றாலும், சொத்தை சம்பாதித்தவரின் முகத்தில் மகிழ்ச்சியை காணும்போது நான் நேர்மையாகவே வழக்கறிஞர் தொழிலை நடத்துகிறேன் என மனம் நிம்மதி அடைகிறேன்.

இதன்மூலம் அதிகாரம் மிக்க தலைவர்களுக்கு நான் விடுக்கும் அன்பான வேண்டுகோள்.

அப்பாவி மக்களின் சொத்துக்களை பறித்து வாழும் வாழ்க்கை ஒரு வாழ்க்கை அல்ல என்பதை ஜெயலலிதாவின் வாழ்க்கையை படித்து தெரிந்துகொள்ளுங்கள் என்பதே. நன்றி
அன்புடன் :வழக்கறிஞர் V.S.கோபு.

seeman house advocate fb - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories