தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறப்பு! அரசு உதவாது என எடப்பாடி அறிவிப்பு!

அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் சற்றுமுன் நெல்லை
sterlite - 2026

தூத்துக்குடி: பசுமைத் தீர்ப்பாயத்தின் அனுமதியின் பேரில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இன்று திறக்கப் பட்டது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்கக் கோரும் பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி தமிழக அரசு தொடுத்த இடைக்காலத் தடையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. அத்துடன் உயர்நீதிமன்ற மதுரை கிளை விதித்த இடைக்காலத் தடையையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இருப்பினும் ,ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்க மாட்டோம் என்ற தம் நிலையில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக அறிவித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதித்துள்ள உச்ச நீதிமன்ற உத்தரவு தமிழக அரசின் கொள்கை முடிவுகளுக்கு எதிரானது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தொழிற்சாலைகளுக்கு என தனி சட்டம் உள்ளதாகவும். அதை மீறி செயல்பட்டதால் தான் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூலமாக ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

எனவே பசுமைத் தீர்ப்பாயம் அனுமதித்தாலும் ஸ்டெர்லைட் ஆலை இயங்க தமிழக அரசு எந்த வகையிலும் உதவாது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.