திருவாரூர் இடைத் தேர்தலுக்கு நாங்கள் பயந்ததே கிடையாது: அமைச்சர் காமராஜ்

Published:

05 July03 Kamaraj minister - 2026

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் காமராஜ், திருவாரூர் இடைத்தேர்தலுக்காக நாங்கள் பயந்தது இல்லை என்று கூறினார்.

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்தாக ஆளும் தரப்பு தான் காரணமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்தார் அமைச்சர் காமராஜ்.

அப்போது அவர், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. எல்லா விதத்திலும் தயாராக தான் இருந்தது. தேர்தலை கண்டு எப்போதும் அ.தி.மு.க. பயந்தது கிடையாது.
இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானவுடனே அதற்கு நாங்கள் தயாராகி விட்டோம். தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் என்று நாங்கள் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. திருவாரூரில் என்றைக்கு தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று கூறினார்.

Related articles

Recent articles

spot_img