‘லயோலா’ புரிந்த 8 குற்றங்கள்..!

அடடே... அப்படியா? உரத்த சிந்தனை சற்றுமுன் புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
loyola college 1 - 2026

கடந்த சனி, ஞாயிறு இரு நாட்களில் வீதி விருது கலை நிகழ்ச்சி லயோலா கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், தேசத்தை இழிவுபடுத்தும் ஓவியக் காட்சி நடைபெற்றுள்ளது. இது குறித்து போலீஸில் புகார் கொடுத்துள்ளனர் பலரும்.

இந்நிலையில், லயோலா புரிந்த குற்றங்கள் என்ன என்று அடுக்கிக் கொண்டு வருகிறார் சமூக வலைத்தளங்களில்.

முதல் குற்றம்: தேசத்தை பழித்தது

இரண்டாம் குற்றம்: மதக்கடவுளரை, வணக்கத்திற்குரிய மதச்சின்னங்களை பழித்தது

மூன்றாம் குற்றம்: தேசத்தலைவரை பழித்தது

நான்காம் குற்றம்: நீதிமன்றங்களை பழித்தது

ஐந்தாம் குற்றம்: பெண்களை, பெண் உருவங்களை பொது இடத்தில் அவமதிக்கும் விதமாக வரைந்து வைத்தது

ஆறாம் குற்றம்: தேச நலனை பேணும் இயக்கத்தின் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டு, பழிவிழும் விதமாகவும், அவமதிக்கும் விதமாகவும் பேச்சு, படம் வரைந்து வைத்தது.

ஏழாம் குற்றம்: மேற்கண்ட அனைத்தையும், பெரும்பான்மையினரின் மத சுதந்திரம், நம்பிக்கைகளை பாதிக்கும் எனத் தெரிந்தே திட்டமிட்டு செய்தது.

எட்டாம் குற்றம்: எதிர்ப்பு வந்தவுடன், எமக்கேதும் தெரியாது என்று சப்பை கட்டு கட்டி, பெரும்பான்மையினரின் பெயரிலுள்ள ஒருவரின் பெயரில் ஒப்புக்குச் சப்பாணி மன்னிப்பு அறிக்கை வெளியிடுவது.

  • மு.ராம்குமார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.