ஜெயலலிதா, அண்ணாதுரை ஆகியோருக்கு பாரத ரத்னா கொடுக்க முதல்வர் கோரிக்கை மனு!

அடடே... அப்படியா? சற்றுமுன் தமிழகம் மதுரை
madurai modi - 2026

மதுரை: மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் பல்நோக்கு மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டுவிழாவில் கலந்துகொண்டு அடிக்கால் நாட்டி வைத்தார் பிரதமர் மோடி. அதற்காக மதுரை வந்திருந்த பிரதமரை வரவேற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அவரிடம் ஒரு மனு அளித்தார்.

மதுரையில் பிரதமர் மோடியிடம் தமிழகம் தொடர்பான 17 கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி! அந்த மனுவில், முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணாதுரை மற்றும் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டிருந்தது.

மேலும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயரைச் சூட்ட வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை வைக்கப் பட்டது.

PMModi | #EdappadiPalaniswami | #MGR | #Jayalalithaa

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.