பிரதமர் பங்கேற்ற மதுரை நிகழ்ச்சிகள்… இவைதான் நடந்தன!

தமிழகம் மதுரை லைஃப் ஸ்டைல்
bjp meeting - 2026

பிரதமர் மோடி மதுரையில் நடைபெற்ற விழாக்களில் இன்று பங்கேற்றார். பிரதமர் கலந்து கொண்ட விழாக்களில் நடைபெற்றவை குறித்த சில துளிகள்…

தனி விமானம் மூலம் மதுரை வந்த பிரதமர் தனி விமானத்தில் கேரளா மாநிலம் கொச்சி சென்றார். ஆளுநர், முதல்வர் வரவேற்று, வழி அனுப்பி வைத்தனர்.

மதுரை மண்டேலாநகர் பகுதியில் பாஜக பொதுக் கூட்டம் நடைபெற்றது, அதன் மிக அருகிலேயே எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது.

எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழா அரசு விழாவாக இருந்த போதிலும், தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் இசைக்கப்படவில்லை.

உலக முதலீட்டாளர் மாநாட்டில் பேச வாய்ப்பு கிடைக்காத துணை முதல்வருக்கு, எய்ம்ஸ் விழாவில் பிரதமர் முன்பு வரவேற்பு சொல்லும் வாய்ப்பு கிடைத்தது. பாஜகவை தொடர்ந்து விமர்சித்து வரும் மக்களவை துணை சபாநாயகர் மேடையில் முக்கிய இடத்தில் அமர்ந்திருந்தார்.

துணை முதல்வர் தனது வரவேற்புரையில் ஆளுநர் பெயரை மறந்து விட்டார். முதல்வர், பிரதமர் இருவர் மட்டுமே பேசினர், நன்றியுரை கிடையாது.

modi lays foundation aiims - 2026

எய்ம்ஸ் அமையும் இடம் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி, விழா நடந்த இடம் மதுரை தொகுதி என்பதால் இரு எம்பிக்கள் மேடையேற வாய்ப்பு கிடைத்தது.

எய்ம்ஸ் விழாவில் தமிழக முதல்வர் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை, பிரதமரும் எந்த அறிவிப்பும், வாக்குறுதியும் கொடுக்கவில்லை.

பாஜக பொதுக் கூட்டத்தில் மாநிலத் தலைவர் தமிழிசை வரவேற்புரை ஆற்றும் போது 10 நாடாளுமன்றத் தொகுதி தொண்டர்களையும் தனித்தனியாக எழுந்து நிற்கச் சொல்லி பெருமைப்படுத்தினார். பிரதமர் மட்டுமே பேசினார்.

பிரதமர் மோடி எப்போதும் போல தொலைக்காட்சி செய்தியாளர்கள் பயன்படுத்தும் ப்ராம்டர் பார்த்து பேசினார். வழக்கம் போல் இந்தியில் பேசாமல் முதன் முறையாக தமிழ்நாட்டில் ஆங்கிலத்தில் பேசினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவித்து பேச்சைத் தொடங்கினார்.

பிரதமர் பேச்சை எச்.ராஜா கையில் வைத்திருந்த தமிழ் குறிப்புகளோடு மொழிபெயர்ப்பு செய்த போதிலும் ஓரிடத்தில் தடுமாறினார்.

பாஜக பொதுக் கூட்டம் முடிந்ததும் விமான நிலையத்தில் பிரதமர், முதல்வர், துணை முதல்வர் தேர்தல் தொடர்பான ஆலோசனைகள் செய்ததாக கூறப்படுகிறது.

தமிழகம் வந்த பிரதமருக்கு மதுரை மீனாட்சி, முருகன், ஜல்லிக்கட்டு காளை நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக கூறி கருப்புக்கொடி போராட்டம் நடத்திய வைகோ, கொளத்தூர்மணி, திருமுருகன்காந்தி, முகிலன் உள்பட 300க்கும் மேற்பட்டோர் மதுரையில் கைது செய்யப்பட்டனர்.

எய்ம்ஸ் மட்டுமில்லை.. தமிழகத்தில் இன்று பிரதமர் மோடி துவக்கி வைத்த திட்டங்கள் இவைதான்! அதுகுறித்த பட்டியல் இதோ:

????மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல்லை நாட்டினார்
????மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிகிச்சை மையம் திறப்பு
????திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிகிச்சை மையம் திறப்பு
????தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிகிச்சை மையம் திறப்பு
???? தமிழகத்தில் உள்ள போஸ்ட் ஆபீஸ்களில் 12 பாஸ்போர்ட் சேவை மையங்களையும் மோடி ரிமோட் மூலமாக திறந்து வைத்தார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.