தட்டுல மீதம் வெச்சா ரூ.50 அபராதம்! ஃபுல்லா ஒரு கட்டு கட்டினா ரூ.10 பரிசு! விநோத ஹோட்டல்!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
andhra hotel - 2026

மீதம் வைத்தால் அபராதம்: சாப்பிட்டால் வெகுமானம். இதுதான் ஹோட்டல் காரரின் டெக்னிக்.

தெலங்கானா மாநிலம் வாரங்கல்லில் உள்ள, ‘ஹனுமகொண்டா கோர்ட்’ நாற்கூடலி அருகில் ‘லிங்காகேதாரி’ என்பவர் ஃபுட் கோர்ட் நடத்துகிறார். இங்கு உணவை வீணடித்தால் அபராதம் கட்ட வேண்டும்.

இந்த உணவகத்திற்கு வருபவர்கள் 60 ரூபாய் செலுத்தி டோக்கன் வாங்கிக் கொள்ள வேண்டும். தட்டில் எந்த உணவு பதார்த்தத்தையும் வீணடிக்காமல் சாப்பிட்டால் பத்து ரூபாய் திரும்ப கொடுத்து விடுவார்கள்.

ஏதாவது உணவை தட்டில் மீதம் வைத்து தூர எறிந்து விட்டால் 50 ரூபாய் அபராதம் கட்டித் தீரவேண்டும்.

ஒரு காலத்தில் சாப்பாடு கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டாராம் இந்த உணவக உரிமையாளர் கேதாரி. மக்களுக்கு உணவின் மதிப்பு தெரிய வேண்டும் என்பதற்காகவே இப்படி ஒரு வழியை கடைப்பிடிப்பதாக கூறுகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.