கேபிள் டிவி புதிய கட்டண முறை.. கால அவகாசம் நீட்டிப்பு!

Published:

tv chanels - 2026

கேபிள் டிவி புதிய கட்டண முறைகளை அமல்படுத்துவதற்கான அவகாசம் மார்ச்-31ஆம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. பிப்.1 முதல் புதிய கட்டணத்தை அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் கால அவகாசம் நீட்டிக்கப் படுவதாக ட்ராய் அறிவிப்பு.

அரசு கேபிள்களில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் புதிய கட்டண விகிதத்தை டிராய் அறிமுகம் செய்தது. இதனால், பொதுமக்கள் தாங்கள் விரும்பிய சேனல்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், ஏற்கெனவே மாதா மாதம் செலுத்திய ரூ. 160 தொகையுடன் சேர்த்து, தாங்கள் விரும்பும் கட்டண சேனல்களுக்கும் சேர்த்து கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் ரூ.250 க்கும் மேல் ஒவ்வொரு மாதமும் செலுத்த வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டனர்.

இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கை ஏற்று, கேபிள் டிவியின் புதிய கட்டண முறைகளை அமல்படுத்துவதற்கான கால அவகாசத்தை மார்ச் 31ம் தேதி வரை நீட்டித்து டிராய் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

Related articles

Recent articles

spot_img