டிஷர்ட், கல்யாண பத்திரிகையை அடுத்து… மார்க்கெட்டைக் கலக்கும் ‘மோடி புடவைகள்’!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

modi saree3 - 2026இப்போதைய லேட்டஸ்ட் ட்ரெண்ட் மோடி புடவைகள்தான்! அதுவும் தற்போது மார்க்கெட்டில் மோடி புடவைகள் அதிகம் விற்பனையாகின்றனவாம். கடைகளில் வரிசையில் நின்று பெண்கள் ஆர்வத்துடன் மோடி டிசைன் புடவைகளை வாங்கிச் செல்கின்றனர்.

பிரதமர் மோடியின் மீது மக்களுக்குள்ள ‘கிரேஸ்’ கொஞ்ச நஞ்சமல்ல. சில நாட்களுக்கு முன்னர் வரை மோடி படம் பதிக்கப் பட்ட டீ ஷர்ட், கீ செயின் பிரபலமாக இருந்தன. பின்னர், கல்யாண ஜோடிகள் தங்கள் திருமண பத்திரிக்கைகளில் மோடியின்  படத்தையும் அச்சிட்டு, ஆதரவளிக்க வேண்டினர். இவை அவ்வப்போது செய்திகளில் உலா வந்தன.

modi saree - 2026

பிரதமர் மோடி மீது இருக்கும் மதிப்பு மிக்க ஈர்ப்பு இப்போது இளம் பெண்களுக்கும் தொற்றிக் கொண்டுவிட்டது. டீசர்ட் கீ செயினுடன் நின்றிருந்த கிரேஸ் இப்போது புடவைகளுக்குக் கூட பரவிவிட்டது.

குஜராத்தில் மோடி புடவைகள் கடைகளில் விற்பனைக்கு வந்துவிட்டன. சரியாகச் சொல்வதென்றால், தற்போது தேர்தல் சீஸன் சூடுபிடிக்கும் முன்னதாக, சூரத்தில் மோடி புடவை சீசன் ஆரம்பித்துவிட்டது.

modi saree2 - 2026

மோடி புகைப்படங்களோடு உள்ள புடவைகள் கடைக்கு வந்ததும் உடனுக்குடன் விற்றுத் தீர்ந்து விடுகின்றன. குஜராத் மாநிலம் சூரத் துணிக் கடைகளில் மோடி படம் போட்ட நான்கு வித டிசைன்களில் புடவைகள் பல நிறங்களில் கிடைக்கின்றன.

modi saree1 - 2026

மோடி புடவைகள் வந்துள்ளன என்று தெரிந்ததோ இல்லையோ பெண்கள் துணிக் கடை வாசலில் கியூ கட்டத் தொடங்கி விட்டார்கள். டிஜிட்டல் பிரிண்டிங் தொழில்நுட்பத்தால் மோடி புகைப்படங்களை தத்ரூபமாக புடவைகளில் பதிக்கிறார்கள் நெசவுக் கலைஞர்கள். தற்போது மோடி புடவைகள் தான் நேஷனல் ட்ரெண்டிங் ஆக உள்ளது.

modi saree4 - 2026

கடை உரிமையாளரான ரோனக் ஷா என்பவர் கூறிய போது, மோடி புடவைகள் தற்போது லேட்டஸ் ட்ரெண்ட். திருமண அழைப்பிதழ்கள், தங்கம் வெள்ளிக் கட்டிகள், டிஷர்ட்கள், கப்கள், தண்ணீர்க் கோப்பைகள், இவற்றில் மோடி படம் அச்சாகி வருகின்றன அவை நாட்டின் பல இடங்களுக்கும் மொத்த விற்பனை விலையில் விற்பனையாகி வருகின்றன. மோடி படம் போன்று, மற்ற அரசியல் தலைவர்களின் படங்களை அச்சிட்ட புடவைகளும் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.