பிரசாந்த் பூஷண் விளையாட்டு! முகத்தில் கரிபூசிய உச்ச நீதிமன்றம்!

Published:

prasant bhushan - 2026

பொது நல வழக்கு என்ற பெயரில் விளையாடிக் கொண்டிருந்த பிரசாந்த் பூஷனின் முகத்தில் கரியைப் பூசினார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி.

கொலீஜியத்தின் சிபாரிசுகள் மீது நடவடிக்கை எடுக்காமல் மத்திய அரசு கிடப்பில் போட்டுள்ளது.. அதனால் உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் நடக்க வில்லை. வழக்குகள் தேங்குகின்றன என்றெல்லாம் திரைக்கதை எழுதி மத்திய அரசுக்கு தர்மசங்கடம் ஏற்படுத்தலாம் என்ற கனவில் பொது நல வழக்கு ஒன்றைத் தாக்கல் செயதார் நகர்புற நக்சல் என்று அழைக்கப் படும் பிரசாந்த் பூஷன்.

அதற்கு தலைமை நீதிபதி அரசாங்க தரப்பில் தாமதமில்லை கொலீஜியம் தரப்பில் தான் தாமதம் என்றும் அரசாங்கத்திடம் 27 கோப்புகள் மட்டுமே நிலுவையில் உள்ளன. கொலீஜியத்திடம் 70-80 கோப்புகள் தேங்கியுள்ளன. உயர் நீதிமன்ற நிதிபதிகள் நியமனங்கள் வேகமாக நடக்கிறதே. எங்கள் தரப்பில் சிபாரிசு செய்யத்தான் தாமதமாகிறது என ரஞ்சன் கோகோய் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் ஊழல்கள் குறித்து கடுமையாக விமர்சித்தவர், காங்கிரஸுக்கு எதிராகப் போராடியவர், ஆம் ஆத்மியில் அடையாளத்தைப் பெற்றவர், பின்னர் வெளிவந்து இப்போது அதே காங்கிரஸுக்கு தேர்தல் ஆலோசகராக உள்ளார் என்பது பிரசாந்த் பூஷன் விவகாரத்தில் ஒரு  ‘யு டர்ன்’!

ALSO READ:  இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து வெளித் தள்ளப்பட்ட பிரசாந்த் பூஷன் மாநிலங்களவை உறுப்பினராகும் கனவில் மிதந்து வருகிறார்.  தில்லி வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுபவை…

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img