December 5, 2025, 3:15 PM
27.9 C
Chennai

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வில் அதிர்ச்சி..! பிழைகள் மலிந்த தமிழ் வினாத்தாள்!

tamil qn paper - 2025

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் – சிபிஎஸ்இ., பாடத் திட்டத்தின், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத் தேர்வு இன்று நடைபெற்றது!

இதில் இந்த ஆண்டுக்கான தமிழ் வினாத்தாளில் பல்வேறு எழுத்துப் பிழைகள் மிகுந்திருந்ததை சுட்டிக்காட்டுகிறார்கள் ஆசிரியர்கள்.

வினாத்தாளில் உள்ள பிழைகள் இவை..!

வினா எண் ஒன்றில் பக்கம் மூன்றில் மீட்பு படையினர் என்பதும்,
வினா எண் இரண்டில் சுரங்கத்தில் என்பதும்,
வினா எண் 2 பக்கம் 5ல் செப்புத்திருமேனி, செம்பியன் மாதேவி என்பதும்,
பக்கம் 6ல் பல்லவர் கால
பக்கம் 8 இல் ஓர் அறிஞர்
வினா எண் 3 – சுருக்கி வரைக: என்பதில், பத்திகளுக்கு இடையேயான தொடர்பு இல்லை! வாக்கிய அமைப்பில் கருத்துத் தெளிவு இல்லை!
மேலும், இலக்கணக்குறிப்பு எழுதுக என்பதில், வௌவால் என்பதற்குரிய சரியான விடை இல்லை
வினா எண் 13 பக்கம் 19ல் திருக்குறள் சீர் பிரித்தலில் தவறு உள்ளது
வினா எண் 14 பக்கம் 19ல் வினா எண் மூன்றில் அப்பூதி பிழை உள்ளது!

பத்தாம் வகுப்புக்கான தமிழ் வினாத்தாள் இது. வௌவால் என்பது, ஐகாரக் குறுக்கம், மகரக் குறுக்கம், ஆய்தக் குறுக்கம், தொகை உவமை என்று நான்கு குறுக்கங்கள் இருந்தாலும், ஔகாரக் குறுக்கத்தினை குறிப்பிடாமல் குறுக்கி விட்டார்களே!

… திருமேனி இதற்கு தக்கதொரு சான்றாகும். அண்மைக் காலங்களில் கண்டுபிடிக்கப்பட்ட செப்புத் திருமேனிகளால் பல்லவர் காலத்தில் இக்கலை நல்ல வளர்ச்சியற்ற நிலையில் விளங்கி இருந்ததை அறியலாம் என்று உள்ளது. ஆனால் வளர்ச்சியுற்ற என்று வந்திருக்க வேண்டும்! அதேபோல் அதே பெயரில் இன்னொரு இடத்தில் செப்பத் திருமேனி என்று வந்துள்ளது. அது செப்புத்திருமேனி என்று இடம் பெற்றிருக்க வேண்டும். இப்படி வளர்ச்சியற்ற என்பதும் வளர்ச்சியுற்ற என்பதும் எத்தகைய பொருள் மாறுபாட்டைத் தரும் என்பதை மாணவருக்கு விளக்க வேண்டிய நிலையில் வினாத்தாள் இருப்பது வருத்தத்துக்கு உரியது.

cbse tamil3 - 2025

இன்னோர் இடத்தில், நாகரிகம் வளர வளர மக்கள் மண்வாசனையை அடியோடு மறக்கும் துயர நிலையை இனியும் தொடர விடாமல் இளைஞர்களாகிய நாம் நம் மூத்தவர்களுக்கு கிராமங்களில் முக்கியத்துவத்தை புரிய வைக்க வேண்டும். விவசாயம் என்பது ஒரு புனிதமான வேலை/ நம் நாட்டின் செல்வம் என்றால் அதில் பசுமையும் ஒன்றே தவிர பணமும் பொருளும் இருந்தால்தான் அந்த நாடு ஒரு நாடு வல்லரசு நாடாகாது. இதை நமக்கு உணர்த்தவே நமது தேசியக் கொடியில் பச்சை நிறத்தை சேர்த்துள்ளனர் நம் முன்னோர்கள் என்று உள்ளது.

ஆனால் இதில் வாக்கியம் முழுமை பெறவில்லை. வாக்கிய அமைப்பில் கோளாறு உள்ளது. நம் நாட்டின் செல்வம் என்றால் அதில் பசுமையும் ஒன்றே தவிர என்பதற்குப் பின் பணமும் பொருளும் இருந்தால்தான் அந்த நாடு ஒரு வல்லரசு நாடாகாது… என்று குறிப்பிடப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கத் தக்கது. வாக்கியம் சரியாக அமைக்கப் பெறவில்லை!

கேள்விகளில் அரிச்சந்திரனுக்கு இன்னல்களைச் தந்த முனிவர் யார் என்று உள்ளது.. த்-ற்கு பதிலாக ச் இடம்பெற்றுள்ளது!

பெயர்களுக்கு முன்னால் ஒற்று வராது என்பது தமிழ் இலக்கணப் பாடம். அரிச்சந்திரன் நாடகத்தைப் பார்த்து காந்தியடிகள் கற்றுக்கொண்டது என்ன என்று வர வேண்டும்! ஆனால் காந்தியடிகளுக்கு முன் ஒரு க் இடம் பெற்றுள்ளது தமிழ் மாணவர்களை  தவறாக வழிநடத்துவதாகும்!

அனைத்து செய்யுள் கேள்விகளும் ஒரே  பருவத்தில் இருந்து வந்தன. அவற்றுக்கு எட்டு மதிப்பெண்கள் கொடுக்கப் பட்டுள்ளன.  இரண்டாவது பருவத்தில் இருந்து  இடம் சுட்டிப் பொருள், ஒரு வாக்கிய பதில் மற்றும் திருக்குறள் இவற்றுக்கு 4+1 = 5 மதிப்பெண்கள்! முதல், இரண்டாம் பருவத்திலிருந்து சரியான அளவில் மதிப்பெண்களுக்கான கேள்விகள் எடுக்கப்படவில்லை! கேள்வித்தாளில் பத்துக்கும் மேற்பட்ட பிழைகள் மலிந்துள்ளன!

– இப்படி பிழைகளுடன் தமிழ்ப் பாட வினாத்தாளை தயாரித்து அளித்த ஆசிரியர்களுக்குத்தான் இந்தப் பெருமையெல்லாம் போய்ச் சேரும்.

இது போல், நம் நாட்டில், வேறு எந்த மாநிலத்திலும், வேறு எந்த மொழிப் பாடத்திலும் வேறு எவரும் பிழைகள் செய்ய மாட்டார்கள்! தமிழுணர்வு, சரியாக தமிழை எழுதியும் படித்தும் பழகியும் வருவதுதான்! இது மாநில அரசுப் பாடத் திட்டமோ, மத்திய அரசுப் பாடத் திட்டமோ… வினாத் தாள் தயாரிக்கும் தமிழ் ஆசிரியர்களின் அறிவு நிலை பல்லிளிக்கிறதே!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories