பன்றியை விட குறைவான விலைக்கு… உங்களை வித்துடாதீங்க!

அடடே... அப்படியா? லைஃப் ஸ்டைல்

01 Sep22 Voter ID Card - 2026

இது தேர்தல் காலம். தேர்தலைக் குறித்தான பதிவுகளும் பகிரல்களும் சமூக வலைத்தளங்களில் அதிகரித்தே காணப் படுகின்றன.

அவற்றில் மிக முக்கியமான ஒன்றை பலரும் பகிர்கிறார்கள். அது, வாக்களிக்க பணம் வாங்காதீர்கள் என்பதுதான்! வெறுமனே, உங்கள் வாக்கை விற்றுவிடாதீர்கள், வாக்குக்கு பணம் வாங்காதீர்கள், பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போடாதீர்கள் என்றெல்லாம் பிரசாரம் செய்வதில்லை!

உங்களை விற்றுவிடாதீர்கள் என்ற குறிப்புடன் இத்தகைய தகவல்களைப் பலரும் பகிர்கிறார்கள். நீங்கள் வாங்கும் பணம், ஒரு நாள் செலவுக்குக் கூட வராது. அதை வாங்கி ஐந்து வருடத்துக்கு அடுத்தவனைக் கொள்ளை அடிக்க விடப் போகிறீர்களா என்று கேள்வி எழுப்புகின்றனர்.

மாட்டுக்கும் பன்றிக்கும் விலை பேசலாம், மனிதனே உன்னை விலைபேசாதே; கொத்தடிமையாய் மாறி விடாதே என்று எழுப்பும் குரல் இது..

இன்றைய சந்தை மதிப்பு!
(1) எருமை – ரூ. 80,000 / –
(2) மாடு – ரூ .50,000 / –
(3) ஆடு – ரூ. 10,000 / –
(4) நாய் – ரூ 5,000 முதல் 6,000 / –
(5) பன்றி – ரூ 3,000 முதல் 5,000 / –
மற்றும் தேர்தலில் தன்னை விற்கிற நபரின் விலை மட்டும் ரூ .500 முதல் 1000 / – !
இது ஒரு பன்றியின் விலையைவிட மிகவும் குறைவு
அதை யோசித்து கௌரவத்துடன் வாக்களிக்கவும்  – என்ற வேண்டுகோள்கள் பரவலாகி வருகின்றன.

//அல்சேஷன் ரூ-6000
பொமரேனியன் ரூ-2500
டாபர்மேன் ரூ-7000
ராஜபாளையம் ரூ-5000
தமிழக வாக்காளர்கள்-2000// – என்று நாய்க்கு சரி நிகர் சமானமாக கருத்திடுகின்றார்கள் பலர்! எப்படியோ, வாக்காளர்கள் மனத்தில் தைத்து, ஒரு விழிப்புணர்வு வந்தால் சரிதான்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.