இங்குள்ள ஊழியர்கள் தமிழர்களே!: ஆந்திர வங்கி ஊழியர்கள் ஒட்டிய உருக்கமான போஸ்டர்!

ஆந்திர வனப்பகுதியில், செம்மரங்கள் கடத்தப்படுவதாக பொய்யான குற்றச்சாட்டு தெரிவித்து அப்பாவி 20 தமிழர்களை ஆந்திரா காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் தமிழ் உணர்வுள்ள பல்வேறு கட்சிகள் போராட்டம் நடத்தி வருகிறது. இந்நிலையில், திருநெல்வேலியில் ஆந்திர வங்கியை முற்றுகையிட்டு, ஆந்திர முதல்வரின் உருவ பொம்மையை எரித்த தமிழ்நாடு மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் உள்ளிட்ட 100 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். அப்போது தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் ஊர்வலமாக வந்து சந்திரபாபு நாயுடு உருவபொம்மையை எரித்தனர். இந்த நிலையில், நெல்லையில் உள்ள ஆந்திர வங்கியை கடந்த 4 நாட்களாக தொடர்ந்து முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் இந்த வங்கி ஆந்திர அரசு வங்கி இல்லைங்க ! இந்திய அரசுக்கு சொந்தமானது. மேலும் இங்கு வேலை பார்க்கும் நாங்கள் எல்லாம் தமிழர்கள் தான் என போஸ்டர் எழுதி ஒட்டியுள்ளது பொதுமக்களிடையே மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கரூரில் உள்ள பழைய பை-பாஸ் ரோட்டில் ஆந்திரா வங்கியை திறக்க இந்திய துணை சபாநாயகரும், கரூர் நாடாளுமன்ற உறுப்பினருமான மு.தம்பித்துரையின் மாமனாரான வர்த்தகர் சங்க தலைவர் ராஜூவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த ஆந்திர சம்பவத்தை அடுத்து கோடீ கும்பிடு, கும்பிட்டிடு அய்யோ, நீங்கள் செல்லுங்கள் திறப்பு விழாவிற்கு நான் வரவில்லை என திருப்பி அனுப்பியுள்ளார்.12-04-15 Andra Bank News photo