BSNL OFF 1 - 2026
ஜூலை 1ஆம் தேதி முதல் ரூ.349 விலையில் பிராட்பேண்ட் வசதி மற்றும் மூன்றுவிதமான சலுகைகள்; பி.எஸ்.என்.எல். அதிரடி அறிவிப்பு……!

பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு மிகக்குறைந்த விலையில், பிராட்பேண்ட் சலுகைகளை வழங்க இருக்கிறது. மேலும் தனது வாடிக்கையாளர்களுக்கு மூன்று புதிய சலுகைகளை அறிவிக்க இருக்கிறது.

அதன்படி பிராட்பேண்ட் சேவையில் புதிதாக அறிவிக்கப்பட இருக்கும் சலுகைகளில் பயனர்களுக்கு அதிகபட்சம் தினமும் 3 ஜி.பி. டேட்டா சுமார் 8Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது.

ரூ. 349 மற்றும் ரூ. 399 பிராட்பேண்ட் சலுகைகளில் பயனர்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா வழங்கப்படும் நிலையில், ரூ. 499 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 3 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.

மூன்று புதிய சலுகைகளும் அந்தமான் மற்றும் நிகோபார் தவிர இந்தியா முழுக்க அனைத்து பகுதிகளிலும் வழங்கப்பட இருக்கின்றன.

பி.எஸ்.என்.எல். அறிவித்திருக்கும் மூன்று சலுகைகளும் ஜூலை 1 ஆம் தேதி முதல் வழங்கப்பட இருக்கின்றன.

முன்னதாக பி.எஸ்.என்.எல். தனது வாடிக்கையாளர்களுக்கு சூப்பர்ஸ்டார் 300 பிராட்பேண்ட் சலுகையை அறிவித்தது. இந்த சலுகையில் பயனர்களுக்கு ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தா இலவசமாக வழங்கப்பட்டது.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

புதிய சலுகைகளில் விலை குறைவாக கிடைக்கும் ரூ. 349 சலுகையில் தினமும் 2 ஜி.பி. டேட்டா 8Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. தினசரி டேட்டா அளவை கடந்ததும் டேட்டா வேகம் 1Mbps வேகத்திற்கு மாற்றப்படும். டேட்டா மட்டுமின்றி வாடிக்கையாளர்களுக்கு நாடு முழுக்க பி.எஸ்.என்.எல். நெட்வொர்க்கில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவை வழங்கப்படுகிறது.

மற்ற நெட்வொர்க்களுக்கு அன்லிமிட்டெட் அழைப்புகள் இரவு 10.30 மணி முதல் காலை 6.00 மணி வரை வழங்கப்படுகிறது.

ரூ. 399 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா 8Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. அதன்பின் டேட்டா வேகம் 1Mbps ஆக குறைக்கப்படுகிறது. எனினும், இந்த சலுகையில் நாடு முழுக்க அனைத்து நெட்வொர்க்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவை வழங்கப்படுகிறது.

பி.எஸ்.என்.எல். ரூ. 499 பிராட்பேண்ட் சலுகையில் 8Mbps வேகத்தில் தினமும் 3 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.

தினசரி டேட்டா அளவை கடந்ததும் டேட்டா வேகம் 1Mbps ஆக குறைக்கப்படும். இந்த சலுகையிலும் அனைத்து நெட்வொர்க்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவை வழங்கப்படுகிறது.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

மூன்று சலுகைகளில் பயனர்கள் எதை தேர்வு செய்தாலும், 1 ஜி.பி. மெமரியுடன் ஒரு மின்னஞ்சல் முகவரி இலவசமாக பெறலாம்.

புதிய சலுகைகள் பி.எஸ்.என்.எல். அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. இவை ஜூலை 1 ஆம் தேதி முதல் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending