சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக புரோட்டோ காணப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் கருவக்குடியில் வசித்து வந்தவர் புருஷோத்தமன். இவர் தனியார் ஷோரூம் ஒன்றில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புருஷோத்தமனுக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சண்முக சுந்தரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சண்முகசுந்தரி திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தனது தாயாரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அதனால் புருஷோத்தமன் நேற்று இரவு கடையில் புரோட்டா வாங்கி வந்து வீட்டில் உண்டு கொண்டிருந்துள்ளார். அப்பொழுது சண்முகசுந்தரி அவருக்கு தொலைப்பேசியில் அழைத்துள்ளார்.
மனைவியுடன் பேசிக்கொண்டே புருஷோத்தமன் புரோட்டாவை சாப்பிட்டுள்ளார். அப்பொழுது அவர் கவனக்குறைவாக தொண்டையில் சிக்கிக் கொள்ளும் வகையில் உண்டிருக்கிறார்.சூடான பரோட்டா சிக்கி, அதை விழுங்கவும் முடியாமல், துப்பவும் முடியாமல் மிகவும் அவதிப்பட்டு உள்ளார்.
எதிர்முனையில் தனது கணவர் பேசமுடியாமல் துடிதுடிப்பதை அறிந்த மனைவி சண்முகசுந்தரி பதறிதுடித்து தனது கணவரின் வீட்டருகே உள்ளவர்களுக்கு போன் செய்து அவரைகளைச் சென்று பார்க்கக் கூறியுள்ளார். அவர்கள் உடனே அங்கு சென்று பார்த்தபோது புருஷோத்தமன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்துள்ளார்.

அவர்கள் உடனே புருஷோத்தமனை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்து சென்றுள்ளனர். ஆனால் அவர் பாதி வழியிலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


