முகப்பருவுக்கு முடிவுகட்டணுமா? இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்!

அடடே... அப்படியா? ஆலோசனைகள் நலவாழ்வு லைஃப் ஸ்டைல்

f - 2026

இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப் பெரிய பிரச்சனையே சரும பிரச்சனை தான். இவர்களை பொறுத்தவரையில், எந்த பிரச்சனைக்கும் உடனடியாக தீர்வு கிடைக்க வேண்டும் என்று விரும்புபவர்கள். அதுபோல சரும பிரச்சனைகளுக்கும் உடனடியாக தீர்வு கிடைக்க வேண்டும் என எண்ணி செயற்கையான மருத்துவ முறைகளை பின்பற்றுகின்றனர். இது அவர்களுக்கு பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.

தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில், முகத்தில் ஏற்படும் பருக்களுக்கு எவ்வாறு தீர்வு என்பது பற்றி பார்ப்போம்.

தேவையானவை

பூசணிக்காய் கூழ் – 4 ஸ்பூன்
தயிர் – சிறிதளவு
எலுமிச்சை சாறு – சிறிதளவு
தேன் – 2 ஸ்பூன்
செய்முறை

முதலில் பூசணிக்காயை வெட்டி மிக்சியில் போட்டு கூழாக அரைத்துக் கொள்ள வேண்டும். அதன்பின் அந்த கூழுடன் தயிர், எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து பேஸ்ட் போல செய்து முகத்தில் தடவ வேண்டும். 20 நிடங்கள் ஊற வைத்து, காய்ந்தவுடன், குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும்.

இவ்வாறு செய்து வந்தால், முகப்பருக்கள் நீங்குவதோடும், முக்கால் பொலிவாகவும், பளபளப்பாகவும் காணப்படும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.