பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட ‘குளோபல் கோல் கீப்பர்’ விருது!

Published:

modi goal keeper - 2026

அமெரிக்க சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு, இந்தியாவில் தூய்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருவதற்காக, பில் அண்ட் மெலின்டா கேட்ஸ் அறக்கட்டளை ‘குளோபல் கோல்கீப்பர்’ விருது வழங்கி கௌரவித்துள்ளது.

நாட்டு மக்களின் ஆரோக்கியம் மற்றும் நாட்டின் சுகாதார மேன்மைக்காக ‛துாய்மை இந்தியா’ திட்டத்தை தாம் ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் ஆண்டான கடந்த 2014ஆம் ஆண்டே பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி விட்டார். இதன் மூலம், அனைத்து மக்களுக்கும் கழிப்பிட வசதி செய்து கொடுப்பது, கிராமங்கள் மற்றும் நகரங்களை துாய்மையாக பராமரிப்பது ஆகியவை செயல்படுத்தப் படுகின்றன.

இவ்வாறு, ‛துாய்மை இந்தியா’ திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருவதற்காக பிரதமர் மோடிக்கு அமெரிக்காவின் உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப் படும், குளோபல் கோல்கீப்பர் விருது வழங்கப்பட்டது.

global goalkeeper - 2026

பிரபல மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிபரும், உலகின் செல்வந்தர்களில் ஒருவருமான பில்கேட்ஸின் ‘பில் – மெலின்டா கேட்ஸ்’ தொண்டு நிறுவனம் சார்பில் இந்த ‘குளோபல் கோல்கீப்பர்’ விருது வழங்கப் பட்டது. இந்த விருதினை மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸிடமிருந்து பிரதமர் மோடி பெற்றுக் கொண்டார்.

இது குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்த போது…. ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை நிறைவேற்றி, அதனை தங்களது அன்றாட வாழ்வின் ஒருபகுதியாக மாற்றிய கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன். கடந்த 5 ஆண்டுகளில் 11 கோடிக்கும் அதிகமான கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இத்திட்டத்தால் ஏழை மக்களும் பெண்களும் அதிக பலன் பெற்றனர். திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நாடாக இந்தியாவை மாற்றிக் காட்டுவோம்.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

துப்புரவு இலக்கை அடைவது மட்டுமல்லாமல், ‘பிட் இந்தியா’ மூலம் உடலுறுதி மற்றும் உடல்நலனை பேணிக்காக்கவும் ஊக்கப்படுத்தி வருகிறோம் என்றார்!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img