மெட்ரோ ரயில் நிலைய சுவர் இடிந்து பெண் உயிரிழப்பு!

Published:

metro 3 - 2026

ஐதராபாத் மெட்ரோ ரயில் நிலையத்தில் கான்கிரீட் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த மெளனிகா என்பவர் தனது தோழியுடன் வெளியில் செல்ல திட்டமிட்டுள்ளார். அதன்படி பேருந்து அல்லது ஆட்டோவில் செல்லலாம் என அவர்கள் எண்ணத்தை மோனிகாவின் கணவர் மெட்ரோவில் செல்லுவதே பாதுகாப்பு எனக் கூற இருவரும் அமீர்பேட் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

அந்த ரயில் நிலையத்தில் நடைபாதையில் ரயிலுக்காக காத்துக் கொண்டிருந்த நிலையில்
திடீரென செங்குத்தாக சுவர் இடிந்து மோனிகா தலையில் விழுந்தது. இதனால் ரத்த வெள்ளத்தில் மௌனிகா ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். ஆனால் போகும் வழியிலேயே அவர் உயிர் பரிதாபமாகப் பிரிந்தது.

metro accident - 2026

இதுகுறித்து ஹைதராபாத் மெட்ரோ இயக்குனர் ரெட்டி கூறியபோது `மெட்ரோ கான்கிரீட் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் இளம் பெண் உயிரிழந்துள்ளது மிகவும் துர்திர்ஷ்டவசமானது. விபத்து நடந்த காரணம் பற்றி மிகவும் தீவிரமாக விசாரணை நடத்திவருகிறோம். ஹைதராபாத்தில் உள்ள அனைத்து , மெட்ரோ நிலைய கட்டடங்களின் தன்மையையும் பரிசோதிக்கக் கூறியுள்ளேன். இறந்த இளம் பெண்ணுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என அரசை நாங்கள் கேட்டுக்கொண்டுள்ளோம்” என்றார்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மழை பெய்ததால் சுவர் வலுவிழந்து இருண்டதாகவும், இதனால் தான் சுவர் இடிந்து விழுந்து விட்டதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுபோன்ற விபத்துக்கள் இனியும் நிகழாமல் இருக்க மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள அனைத்து சுவர்களையும் பரமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று என்று கோரிக்கை எழுந்துள்ளது

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

Related articles

Recent articles

spot_img