மூன்று பேருடன் திருமணம்! முடிவோ அந்தோ பரிதாபம்!

அடடே... அப்படியா? சற்றுமுன் தமிழகம்

raja 3 wife - 2026தர்மபுரி மாவட்டம் நேட்சுரல்ஸ் சலூனில் வேலைப்பார்த்து வந்தவர் ராஜா வயது 30  தனது சொந்த மாமன் மகள் சந்தியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு இரு குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்.

அவருக்கு தேனியில் பணியிடை மாற்றம் கொடுக்க, அங்கு சென்று தனியாக இருந்த ராஜா, தனலட்சுமி என்ற  பெண்ணை தான் திருமணமானவர் என்பதை மறைத்து காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

பிறகு மற்றொமொரு ஊருக்கு மாற்றம் செய்யப்பட்ட ராஜா அங்கேயும் தனது வேலையை ஆரம்பித்துள்ளார். ஆதரவற்ற 19 வயதே ஆன காவ்யா என்ற இளம் பெண்னை காதலித்தார்  ராஜா

அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஆசை வார்த்தை காட்டி அடிக்கடி உல்லாசமாக இருந்த நிலையில், மீண்டும் புதுச்சேரிக்கு மாற்றம் ஆனார் ராஜா.

முதல் மனைவியிடம் சொல்லாமல், வெளியில் விடுதியில் தங்கியிருந்தார், இந்த நிலையில் மூன்றாவது காதலியுடன் உல்லாசமாக இருக்க விரும்பிய ராஜா அவரை போனில் அழைத்து வற்புறுத்த, காவ்யா மறுத்ததுடன் போனையும் துண்டித்து விட்டார்,

ALSO READ:  செங்கோட்டை- நெல்லை பயணிகள் ரயில் சேவையில் மாற்றம்!

இதனால் மனமுடைந்த ராஜா, விடுதி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார், தகவலறிந்த போலீசார் விசாரணை செய்வதற்கு ஆயுத்தமான போது, அவர் தனது கணவர் என சொந்தம் கொண்டி 3 பெண்கள் வந்து நின்றதும் , அதிர்ந்து போனார்கள்.

பின்னர் ஒரு வழியாக சமாளித்து முதல் மனைவி சந்தியாவிடம் ராஜாவின் உடலை கொடுத்து அனுப்பினர், 3 பேரை திருமணம் செய்யுதும்  பரிதாபமாக ராஜா தற்கொலை செய்து கொண்டது பேச்சிற்கு இடமாகியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.