tabsi - 2026தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘ஆடுகளம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. தொடர்ந்து ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இதனை தொடர்ந்து அவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார். இதனால் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ளார்.பிங்க்,மன்ம்ரிசியாம் போன்ற படங்கள் இவருக்கு மக்களிடையே வரவேற்பைப் பெற்றுத் தந்தது.

இந்நிலையில் அவரது தங்கையின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு சர்ப்பிரைஸ் கிஃப்ட் ஒன்றை பரிசளித்துள்ளார் டாப்ஸி. தன்னுடைய சொந்த பணத்தில் அவருடைய தங்கைக்கு ஜீப் காம்பஸ் வாகனத்தை பரிசளித்துள்ளார்.Jeep Compass - 2026ஜீப் காம்பஸ் இந்தியாவில் மிகவும் பிரபலமான கார்களில் ஒன்றாகும். பாலிவுட் திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகள் பலரிடமும் ஜீப் காம்பஸ் கார் உள்ளது.

ஜீப் வாங்கிய கையோடு அங்கேயே கேக் வெட்டி பிறந்தநாளையும் கொண்டாடினர் டாப்ஸியும் அவரது தங்கையும். இது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் காணொளி ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.அவருடைய பிறந்தநாளும் வரயிருப்பதாகவும் அதற்கு தங்கை அளிக்குப்போகும் பரிசைப் பற்றிய ஆவலுடன் அவர் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நடிகை டாப்ஸி தனது தங்கைக்கு ஜீப் பரிசளித்தது தொடர்பான போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதனை ஏராளமானோர் லைக் செய்து வருகின்றனர்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending