வழக்கமான ஒரு நாட்டின் அதிபர், பிரதமர் போன்ற உயர் பதவியில் உள்ளவர்கள் பாதுகாப்பு கருதி தனி விமானத்திலேயே பயணமாகின்ற சூழசில் கடுமையான நிதி நெருக்கடியில் பாகிஸ்தான் சிக்கியுள்ள நிலையில் இம்ரான் வர்த்தக விமானத்தில் பயணமாவதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் இம்ரான் கானுடன், தகவல்துறை அமைச்சர் ஃபிர்தோஸ் அவான், வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மக்மூத் குரேஷி, ராணுவ ஜெனரல் ஜாவேத் பஜ்வா ஆகியோரும் உடன் செல்ல இருக்கின்றனர்.
நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதியம் கடந்த மாதம் 6 பில்லியன் டாலர்களை கடனாக தர ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் பாகிஸ்தானின் நேச நாடுகளான சீனா, சவுதி அரேபியா மற்றும் துபாய் போன்றவையும் அந்நாட்டிற்கு உதவியுள்ளது குறிப்பிடத்தக்கது.




