உலக அளவில் அதிக மக்களால் விரும்பப்படும் இந்தியர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.
இதுகுறித்து இங்கிலாந்தை சேர்ந்த யூ கோவ் நிறுவனம் ஆய்வில், உலக அளவில் அதிக மக்களால் விரும்பப்படும் இந்தியர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார். அதிக மக்களால் விரும்பப்படும் பெண்கள் பட்டியலில் இந்தியாவின் குத்துச்சண்டை வீரர் மேரி கோம் பெற்றுள்ளார்.
நடிகர் அமிதாப்பச்சன், ஷாருக்கான் ஆகியோர் இந்த பட்டியலில் டாப் 20 பிரிவில் இடம் பெற்றுள்ளனர். இந்திய கிரிக்கெட் வீரர் தோனி, இந்தியாவில் அதிகம் மக்களால் விரும்பப்படும் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். அதிக மக்கள் விரும்பும் பெண்கள் பட்டியலில், மேரி கோம், கிரண்பேடி, பாடகி லதா மங்கேஷ்கர், பாஜக தலைவர் சுஷ்மா சுவராஜ் மற்றும் நடிகை தீபிகா படுகோன் ஆகியோர் டாப் 5 பட்டியலில் இடம் பெற்றுள்ளன.




