
வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறவுள்ள வேலூர் நாடாளுமன்றத் தொகுதி தேர்தலுக்காக தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆகிய இருவரும் ஒரே நாளில் பிரசாரத்தை துவக்குகின்றனர்
பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக ஏப்ரல் 16ஆம் தேதி நடைபெறவிருந்த வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
அதனைதொடா்ந்து வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி வேலுார் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக கூட்டணி கட்சி சார்பில் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்,
திமுகவின் சார்பில் கதிர்ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இதற்கான வேட்பு மனு தாக்கல் மற்றும் வேட்பு மனு பரிசீலனை நிறைவடைந்ததையடுத்து, வேட்பாளர்கள் அனல் பறக்கும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வேலூர் நாடாளுமன்றத் தொகுதி தேர்தலுக்காக தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆகிய இருவரும் ஒரே நாளில் வேலூரில் பிரசாரத்தை துவக்குகின்றனர்.
இதற்காக அதிமுக தலைமைக்கழகம் வியாழனன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் முதல்வர் பழனிசாமி வரும் 27, 28 மற்றும் ஆகஸ்ட் 2 ஆகிய தேதிகளில் வேலூரில் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு வெளியான சற்று நேரத்திலேயே திமுக தலைவர் ஸ்டாலினும் வரும் 27-ஆம் தேதியே, வேலூரில் தேர்தல் பிரசாரத்தை துவக்குகிறார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இரு கட்சியின் .அறிவிப்பால் இரண்டு கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டா்கள் உற்சாகமடைந்துள்ளனா்.


