புதுவையில் சமீப காலமாக சாலை விபத்துக்கள் மிகுதியாக நடைபெறுகின்றன . குறிப்பாக புதுவை- கடலூர் சாலையில் தொடர்ச்சியாக விபத்துக்கள் நடக்கின்றன. இதனால் சாலை விபத்தை தடுப்பதற்கு போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி இன்று காலை 11 மணிக்கு கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பஸ் டிரைவர்களை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் 40-க்கும் அதிகமான பஸ் டிரைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சாலை விதிமுறைகளை பின்பற்றி வாகனம் ஓட்ட வேண்டும்.பெர்மிட் இல்லாமல் ஓடும் பஸ்களுக்கு உரிமம் ரத்தாகும்.
ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.500, டிரைவர் சீருடை இல்லாமல் வாகனம் ஓட்டினால் 100-ம், பஸ் நிறுத்தம் இல்லாமல் வேறு இடத்தில் பஸ்சை நிறுத்தினால் ரூ.500, அதிவேகத்தில் வாகனத்தை ஓட்டினால் ரூ.400, ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டது.


