
இலங்கைக்கு வந்தவுடன் கட்டணம் எதுவுமின்றி இலவசமாக விசா பெற்றுக்கொள்ளும் சலுகையை 39 நாட்டு மக்களுக்கு அளிக்க இலங்கை அரசு திட்டமிட்டு இருந்தது.
கடந்த ஏப்ரல் மாதம் இலங்கை தேவாலயத்தில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது.
அதனை தொடா்ந்து இலங்கையின் மற்ற இடங்களிலும் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. இதனையடுத்து இலவச விசா வழங்கும் திட்டத்தை நிறுத்தி வைத்திருந்தது.
இந்நிலையில், இலங்கையில் சுற்றுலா துறைக்கு புத்துயிரூட்டுவதற்காக, அந்த திட்டம், ஆகஸ்டு 1–ந் தேதி முதல் அமலுக்கு வருவதாக இலங்கை சுற்றுலா துறை மந்திரி ஜான் அமரதுங்கே நேற்று அறிவித்தார்.
உலகின் 39 நாடுகளுடன் இந்தியா, சீனா ஆகிய நாட்டை சேர்ந்தவர்களுக்கும் இந்த சலுகையை நீட்டிப்பதாக அவர் கூறினார்.


