குலசேகரம் அருகே உள்ள பொன்மனை பெருவழிக்கடவு பகுதியைச் சேர்ந்தவர் ஆயிஷா பானு (வயது 19). இவர் கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். குலசேகரம் காவஸ்தலம் பகுதியைச் சேர்ந்த மனாப் (27) என்பவரும் உயிருக்குயிராக காதலித்து வந்தனர். ஆனால் இவர்களது காதலுக்கு ஆயிஷாபானு குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதனையடுத்து போலீசார் 2 பேருடைய உறவினர்களையும் நேரில் அழைத்து விசாரித்தனர். அவர்கள் ஆயிஷா பானுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி தங்களுடன் வரும்படி அறிவுறுத்தினர். ஆனால் அவர் காதலனுடன் செல்வதில் உறுதியாக இருந்தார். பின்னர் 2 மணி நேரமாக ஆயிஷாபானுவின் தாயார் எவ்வளவோ சொல்லியும் எதையும் ஆயிஷாபானு கேட்பதாக இல்லை. இதைத்தொடர்ந்து ஆயிஷாபானுவை அவரது காதலனுடன் செல்ல அனுமதித்துள்ளனர்.


