ஆம்பூர் அருகே அதிர்ச்சி ! விஷமிகள் குத்தியதில் ரத்தம் சொட்ட சொட்ட நின்ற பசுக்கள் !

அடடே... அப்படியா? இந்தியா கிரைம் நியூஸ் தமிழகம்

cow - 2026ஆம்பூர் அருகே உள்ளது ரத்தினம் நகர். இங்கு வசித்து வருபவர் சோட்டாபாய். 40 வயதான இவர் ஒரு விவசாயி. அதனால் சொந்தமாகவே இவர் 5 மாடுகளை வைத்துள்ளார். இதற்காக வீட்டு பக்கத்திலேயே ஒரு தொழுவும் கட்டி உள்ளார்.

எப்போதும் போல், நேற்றிரவும் மாட்டு கொட்டகையில் மாடுகளை கட்டி வைத்துவிட்டு சோட்டாபாய் தூங்க போய்விட்டார். இன்றுஅதிகாலை திடீரென பசு மாடுகள் கத்திய சத்தம் கேட்டு அலறி அடித்து கொண்டு எழுந்தார்.

இதனால் ஓடிச்சென்று கொட்டகையில் பார்த்தால், 3 பசு மாடுகளை மர்ம கும்பல் ஒன்று நுழைந்து கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர். பசு உடம்பெல்லாம் சரமாரியான வெட்டு விழுந்திருந்தது. இதனால் வலி தாங்க முடியாமல் 3 மாடுகளுமே கத்தியவாறே இருந்தன. இந்த சத்தத்தை கேட்டு, அக்கம் பக்கத்தினர் கூடி விட்டனர்.

பின்னர் அவர்களின் உதவியுடன் 3 பசு மாடுகளையும் மீட்டு ஆம்பூர் கால்நடை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனார் சோட்டாபாய். அங்கு மாடுகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மேலும், சோட்டாபாய் ஆம்பூர் காவல் நிலையத்தில் இதுசம்பந்தமாக புகாரும் அளித்தார்.

பசு மாடுகளை வெட்டியது யார் என்று தெரியவில்லை. யாராவது சோட்டாபாய் மீது பொறாமை பிடித்து இந்த காரியத்தை செய்தார்களா? அல்லது வேறு காரணமா என்பது குறித்து விசாரணை நடக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.