ரூ.10 ஆயிரத்துக்கு இவ்ளோதான் புத்தகங்களா?! என்ன நடக்கிறது பள்ளிக் கல்வித் துறையில்?!

Published:

books in school education - 2026

பள்ளிக் கல்வித் துறையில் என்ன நடக்கிறது? பத்தாயிரம் ரூபாய்க்கு இவ்வளவுதான் புத்தகங்களா என்று குரல் எழுப்புகிறார்கள் ஆசிரியர்கள்!

இது குறித்து TNPTF மேநாள் பொதுச் செயலாளர், செ நடேசன் கேள்வி எழுப்பிய போது…

நடுநிலைப் பள்ளிகளுக்கு நூலகப் புத்தகங்கள் வாங்க ரூ.10,000/ பள்ளி மேலாண்மைக் குழு கணக்குக்கு வருகிறது.

ஒரு குறிப்பிட்ட பதிப்பகத்துக்கு ரூ.9,500/ காசோலை வழங்குமாறு தொலைபேசி செய்தி வருகிறது. பின் வட்டார வள மையத்திலிருந்து வந்து காசோலை பெற்றுச் செல்கிறார்கள். இதில் பள்ளிக்குத் தேவையான நூல்களைத் தேர்வுசெய்ய பள்ளி மேலாண்மைக் குழுவுக்கு உரிமை இல்லையா?

அப்படியானால் பள்ளி மேலாண்மைக் குழுவின் கணக்குக்கு பணத்தை அனுப்பாமல் நேரடியாக புத்தகங்களையே அனுப்பியிருக்கலாமே!

சென்னையில் உள்ள ஒரு குறிப்பிட்ட பதிப்பகத்தில் மொத்தமாக நூல்கள் வாங்க ஏற்பாடு செய்தவர் யார்? இதில் அவர் பெற்ற கழிவுத் தொகை என்ன? இவ்வாறு பல கேள்விகள் கேட்கப்பட வேண்டும்… என்று உள்ளம் குமுறுகிறார்.

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

ஏற்கெனவே நூலகத்துறையில் நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்குவதில் பெரும் முறைகேடுகள் நடப்பது உலகுக்குத் தெரியும்! சென்னையில் உள்ள குறிப்பிட்ட சில பதிப்பகங்களே அரசு சார் நூலகங்களுக்கு புத்தகங்களை வழங்கிக் கொண்டிருக் கிறார்கள். சிறு பதிப்பாளர்களோ, தங்கள் புத்தகங்களை சொந்த பதிப்பகத்தின் மூலம் செலவு செய்து வெளியிடும் எழுத்தாளர்களோ அரசு நூலகங்களுக்கு புத்தகங்களை வழங்க கிட்டேயே நெருங்க முடியாது என்னும் நிலை!!

இந்த நிலையில் பள்ளிக் கல்வித் துறையிலும் அத்தகைய முறைகேடுகள் நடப்பதாகக் கூறப்படுவது, நிச்சயம் விசாரிக்கப் படவேண்டியதுதான்!

Related articles

Recent articles

spot_img