சிதம்பர ‘ரகசியம்’! மோடிக்கு நேற்று ‘ஷொட்டு’! இன்று ‘திட்டு’!

Published:

14 June11 P Chidambaram 1 - 2026

காக்கிச் சட்டைகளின் நெருக்குதலில் இருந்து கறுப்பு கவுன்களின் தயவில் தப்பித்துக் கொண்டிருக்கும் கதர்ச்சட்டைக்காரர் காவித் தீவிரவாதம் என்று சொல்லி கிழிந்த சட்டை பாமரனை திசைதிருப்பி தப்பித்து வருவது உலகறிந்த சிதம்பர ரகசியம்!

மத்திய அரசு மீதும், பிரதமர் மோடியின் மீதும் அவதூறுக் கருத்துகளை அள்ளிவிடும் முன்னாள் நிதி அமைச்சர், திடீரென்று நேற்று மோடியின் திறமையைப் பாராட்டினார். அது ஒரு பாராட்டு என்று உணர்ந்ததாலோ என்னவோ, இன்று மீண்டும் தூற்றத் தொடங்கிவிட்டார்.

கங்கை நதியை தூய்மைப்படுத்தும் பணியில் ஆளும் மத்திய அரசின் நடவடிக்கை சிறப்பாக உள்ளது என்று மனதார பாராட்டு தெரிவித்தார் ப.சிதம்பரம்.

ஐஎன்எக்ஸ் மீடியா மற்றும் ஏர்செல் மேக்ஸிஸ், சட்டவிரோத பணபரிமாற்றம் என பல்வேறு குற்றச்சாட்டுகளை சிதம்பரமும் அவரது மகன் கார்த்தியும் எதிர்கொண்டுள்ளனர். இதனால் மத்திய அரசின் மீது எப்போதும் விமர்சனத்தை மட்டுமே முன்வைத்து காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் ப.சிதம்பரம் திடீரென நேற்று பாராட்டியது, பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது.

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய  ப.சிதம்பரம், மோடிக்கும் மத்திய அரசுக்கும் சில பாராட்டுதல்களைச் சொன்னார்.

மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாயினர். ஜிஎஸ்டி.,யும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது. அதே நேரம் தேசிய நெடுஞ்சாலை பணியும் பாராட்டுக்குரியது. நாள் ஒன்றுக்கு நாங்கள் செய்ததை விட பல கி.மீ., சாலை அமைத்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் வெற்றிகரமாக நடந்துள்ளது.

அனைவருக்கும் வங்கிக் கணக்கு திட்டம் நல்ல பாராட்டுதலுக்குரியது. எங்களை விட கூடுதலாக 35 கோடி பேருக்கு வங்கி கணக்கு துவங்கும் ஜன்தன் திட்டம் நல்ல முறையில் செயல்பட்டுள்ளது.

கங்கை நதியைத் தூய்மைப்படுத்த காங்கிரஸ் ஆட்சியில் 5 முறை முயற்சி செய்தோம்! ஆனால், அவைஅனைத்தும் தோல்வியில் முடிந்தன. இருப்பினும் பாஜக., அரசின் நடவடிக்கை மிக முனைப்புடன் உள்ளது. இதனால் இந்தத் திட்டம் தோல்வி பெறாது என நினைக்கிறேன். இதனை நினைத்து நான் பெருமை கொள்கிறேன்… என்றார்.

இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், மோடியைத் திட்டித் தீர்க்கும் தனது நிலைப்பாட்டில் இருந்து மாறிவிட்டோமே என்று நினைத்தவர், இன்று டிவிட்டரில் பதிலுக்கு திட்டித் தீர்த்துவிட்டார் வழக்கம்போல்!

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து பிரதமர் மோடியை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார் தனது டிவிட்டர் பதிவுகளில்!

ப.சிதம்பரம் தனது டிவிட்டர் பதிவில்,

இந்திய விமானப் படையின் வீர நடவடிக்கையைப் பாராட்டிய முதல் மனிதர் திரு ராகுல் காந்தி என்பதை பிரதமர் மோடி மறந்து விட்டார்

விமானப் படையின் துணைத் தளபதி உயிர் இழந்தோர் எண்ணிக்கை பற்றி கருத்துக் கூற மறுத்து விட்டார். 300/350 பேர் உயிரிழந்தார்கள் என்ற செய்தியை யார் பரப்பியது?

இந்திய குடிமகன் என்ற முறையில் என்னுடைய அரசை நான் நம்புகிறேன். ஆனால் உலகம். நம்ப வேண்டுமே? அதற்கான முயற்சியை அரசு எடுக்க வேண்டும் என்று சிலர் சொன்னதில் என்ன தவறு? – என்று கேள்வி எழுபியுள்ளார்.

ALSO READ:  மோடியிசம் : இப்போதைய காலகட்டம்

ஆக… நேற்று பாராட்டும் இன்று விமர்சனமும் என இரு தரப்பையும் சமாளித்துவிட்டார் சிதம்பரம்!

Related articles

Recent articles

spot_img