முகநூலில் வெடிகுண்டு மிரட்டல் ! அதிர்ந்த ஆம்பூர் ! அலசிய போலிஸ் !

அடடே... அப்படியா? கிரைம் நியூஸ் தமிழகம்

fb 1 - 2026காஷ்மீர் பிரச்சினை விவகாரத்தினால் நாடே அல்லோலகல்லோலப் பட்டுக் கிடக்கிறது. இன்னும் நான்கு நாளில் சுதந்திர தினம் வேறு வர உள்ளதால், நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு வருகிறது. அந்த வகையில், வேலூர் மாவட்டத்திலும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அதனால் மாவட்டத்தில் உள்ள ரெயில்வே ஸ்டேஷன்கள், வழிபாட்டு தலங்கள், மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் போலீசார் எந்நேரமும் பாதுகாப்பிலேயே விழிப்புடன் இருந்து வருகிறார்கள். அதேபோல, சமூக வலைதளங்களிலும் போலீசார் ஒரு கண் வைத்து வருகிறார்கள்.

நேற்று மாலை கிருஷ்ணகுமார் என்ற ஃபேஸ்புக்கில் ஒரு மிரட்டல் போட்டோ வெளியாகி இருந்தது, அதில், “குண்டு ஒன்னு வச்சிருக்கேன். ஆம்பூருக்கு வெடிகுண்டு ஒன்னு வச்சு இருக்கேன் என கூறப்பட்டிருந்தது. இந்த பதிவு, இணையத்திலும் வேகமாக பரவியது.time bom - 2026இதனால் அதிர்ச்சியுற்ற போலீசார், ஆம்பூர் நகரம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தினர், இன்று காலை ஆம்பூர் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளின் உடமைகள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டன. மோப்ப நாயை கொண்டு,வெடிகுண்டு சோதனை தீவிரமாக நடத்ததப்பட்டது. ஆம்பூர் நகரமே இந்த சோதனையால் பரபரப்பானது.

ALSO READ:  தொடரும் தெய்வத்திருமேனிகள் திருட்டு; இந்து முன்னணி கண்டனம்!

இறுதியில், இது ஒரு புரளி என்றும், பதிவிடப்பட்டிருந்த அந்த முகநூல் பக்கம் போலியானது என்றும் தெரியவந்துள்ளது. வேண்டுமென்றே பீதியை ஏற்படுத்த முயன்ற நபர் யார் என்று சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தி வருகிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.