மாலைக்கு பதில் மலைப் பாம்பு ! ஷாருக்கை வரவேற்ற வினோத ரசிகர் !

Published:

saruk - 2026இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான். இவர் தமிழில், ஹே ராம், சாம்ராட் அசோகா போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் மட்டுமல்லாது, சிறந்த திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார்.

தற்போது மெல்பெர்னில் நடைபெற்று வரும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் கலந்துகொண்டு இருக்கிறார் ஷாரூக். இந்த விழாவில் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்ததற்காக விஜய் சேதுபதி மற்றும் காயத்திரியும் கலந்து கொண்டுள்ளனர்.saruk 3 1 - 2026ஷாருக், விஜய் சேதுபதி, காயத்திரி உள்ளிட்டோர் நிற்கும் புகைப்படம் சமீபத்தில் வைரலானது. அங்கிருந்து ஏகப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் ஷாருக்கான் கழுத்தில் மலைப் பாம்புடன் நிற்கும் புகைப்படம் மற்றும் வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.saruk 1 1 - 2026அங்குள்ள லா துரோப் பல்கலைக்கழகத்தில் ஷாருக்கிற்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இது ஷாருக்கானுக்கு வழங்கப்படும் 5-வது கௌரவ டாக்டர் பட்டம் ஆகும். அப்போது தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

திடீரென ஷாருக்கை வரவேற்கும் விதமாக ஒருவர் மலைப் பாம்பை அவரது கழுத்தில் மாலைப் போல் போட்டு விட்டு நகர்ந்து விடுகிறார்.  இதனால் முதலில் ஷாருக் அதிர்ச்சியாகிறார். பின்னர் அவர் சிரித்துக் கொண்டே போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார்.

இந்த வீடியோவும், புகைப்படங்களும் இணையத்தில் டிரெண்டிங்காகியுள்ளது. பாம்பு கழுத்தில் இருக்கும் போதும்,  பயப்படாமல் எப்படி நிற்கிறார் பாருங்கள் எங்கள் சூப்பர்ஸ்டார் என சமூகவலை தளங்களில் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img