கதர் துணியால் தயாரிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய தேசியக்கொடி லடாக்கின் லே எனும் பகுதியில் நிறுவப்பட்டுள்ளது.
இன்று மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து, லடாக்கிலுள்ள லே எனும் பகுதியில் கதர் துணியினால் செய்யப்பட்ட மிகப்பெரிய தேசிய கொடி நிறுவப்பட்டுள்ளது.
இந்த கொடி 225 அடி நீளமும், 150 அடி அகலமும், 1000 கொண்டது என கூறப்படுகிறது. காலையில் நடைபெற்ற தேசிய கொடியை நிறுவும் நிகழ்ச்சியில் லடாக் லெப்டினன்ட் கவர்னர் ஆர் கே மாத்துர், ராணுவ முதன்மை தளபதி மனோஜ் முகுந்த் நரவணே ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்