December 8, 2024, 1:25 AM
26.8 C
Chennai

டீக்கடை வருமானத்தில்உலகம் சுற்றும் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளும் தம்பதி!

vijayanvijayan mohana
vijayanvijayan mohana

தங்களுடைய டீக்கடை வருமானத்தின் மூலம் கிட்டத்தட்ட 14 ஆண்டுகளில் 25 நாடுகளைச்சுற்றி வியப்பை ஏற்படுத்தியுள்ளார்கள் இந்த கேரளாவைச் சேர்ந்த தம்பதி.

வாழ்க்கையில் வெளிநாடுகளுக்குச் சென்று அங்குள்ள இடங்களையெல்லாம் சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். ஆனால் ஒவ்வொரு குடும்பமும் அவர்களின் பொருளாதாரச் சூழல் கருதி தம் ஊருக்குப் பக்கத்தில் இருக்கும் இடத்திற்குக் கூட செல்ல முடியாமல் தவிப்பார்கள்.

ஆனால் நம்முடைய சந்தோஷத்திற்கு எல்லாம் வறுமை ஒரு தடையில்லை எனவும், நம் கனவு தான் நம்மை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும் என்பதற்கேற்ப தன்னுடைய டீக்கடை வருமானத்தின் மூலம் உலகையே சுற்றிக் கொண்டிருக்கின்றனர் இந்த சூப்பர் ஜோடி.

vijayan
vijayan

கேரள மாநிலம் கொச்சினில் காந்திநகர் பகுதியில் டீக்கடை ஒன்றை நடத்தி வருகின்றனர் 71 வயதான கே.ஆர் விஜயன் மற்றும் 69 வயதான மோகனா. இவர்கள் இருவருக்கும் உலகைச்சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற ஆசை சிறுவயதில் இருந்தே இருந்ததாககவும், ஆனால் இதற்குப் பணம் ஒரு தடையாக இருந்து வந்துள்ளது.

இந்தச் சூழலில் தான், கடந்த 1963-ம் ஆண்டு டீக்கடை ஒன்றை ஆரம்பித்தார் விஜயன், இதன் மூலம் வரும் வருமானத்தைக்கொண்டு உலகத்தைச் சுற்றி வரலாம் என முடிவு செய்தனர்.

ALSO READ:  திமுக.,வினர் வழங்கிய பிரியாணி சாப்பிட்டு 40 மாணவர்கள் உள்பட பலர் மருத்துவமனையில் அனுமதி!

இதற்காக இவர்களது கடையில் யாரையும் வேலைக்கு வைக்கவில்லையாம். இந்த கடையில் இவர்களே முதலாளிகள், இவர்களே தொழிலாளிகள்.

இவ்வாறு தங்களுடைய டீக்கடை வருமானத்தில் குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு, அதில் ஒரு பகுதியை தங்களுடைய சுற்றுப்பயணத்திற்காகச் சேமிக்க ஆரம்பித்தனர்.

tea shop
tea shop

அப்படி கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் சேர்த்து வைத்தத் தொகைத்தான் தற்போது அவர்களின் கனவை நிறைவேற்றிவருகிறது.

கடந்த 2007-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் வேலைக்குச் சிறிது விடுமுறைவிட்டு உலக நாடுகளுக்குப்பறக்க ஆரம்பித்தனர் இந்த விஜயன் – மோகனா தம்பதிகள்.

இதுவரை சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து,நியூயார்க் , பிரேசில், அர்ஜென்டினா, பெரு உள்ளிட்ட நாடுகளுக்குப் பறந்துள்ள இத்தம்பதிகள், இப்படி உலக நாடுகளைச் சுற்றியும் போது பல்வேறு கலாச்சாரங்களைத் தெரிந்துக்கொள்ள முடிகிறது எனவும் இதன் மூலம் வாழ்க்கையில் ஒரு நம்பிக்கை வருவதாகக் கூறுகிறார் விஜயன்.

கடந்த 14 ஆண்டுகளில் எங்களது உலக நாடுகளுக்கிடையேயான சுற்றுப்பயணம் இன்னும் முடியவில்லை. கொரோனா ஊரடங்கினால் இரண்டு ஆண்டுகள் எங்கும் செல்லாமல் இருந்த நிலையில் தற்போது வருகின்ற அக்டோபர் 21-ம் தேதி ரஷ்யா செல்லத் திட்டமிட்டதாகக் கூறுகின்றனர்.

ALSO READ:  பாராலிம்பிக்: பெரும் முன்னேற்றம் கண்ட  இந்திய அணி! 

இந்த முறை தங்களுடைய பேரக்குழந்தைகளுடன் பயணிக்க முடிவு எடுத்துள்ளதாக மகிழ்ச்சியுடன் கூறுகிறார் கே. ஆர். விஜயன்.

மேலும் நாங்கள் இதுவரை 25 நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளோம் எனவும் ரஷ்யா 26-வது நாடு என்கிறார் மோகனா.,” நாங்கள் சென்றதிலே எனக்கு மிகவும் பிடித்தது சுவிட்சர்லாந்து” தான் எனவும் கூறுகிறார்.

இந்த முறை ரஷ்யா செல்லும் போது அதிபர் விளாடிமிர் புதினை பார்க்க நினைப்பதாகவும் கூறுகின்றனர். உழைப்பினால் தனது கனவையும், சந்தோஷத்தையும் நிறைவேற்றி வரும் இவர்களைப்பார்க்கும் போது தன்னம்பிக்கை வருவதுடன் சிறிது பொறாமையுமாகத் தான் உள்ளது.

நிச்சயம் இவர்களின் வாழக்கையை அனைவரும் முன் உதாரணமாகவே எடுத்துக்கொள்ளலாம். இந்த வயதிலும் இந்த தம்பதியின் தன்னம்பிக்கையும், காதலும் அனைவரையும் வியக்கவைக்கிறது.

author avatar
Suprasanna Mahadevan

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளின் இரண்டாவது டெஸ்ட் – அடிலெய்ட் – பகலிரவு ஆட்டம் – முதலிரண்டு நாள்கள்

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளின் இரண்டாவது டெஸ்ட் – அடிலெய்ட்– பகலிரவு ஆட்டம் –...

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளின் இரண்டாவது டெஸ்ட் – அடிலெய்ட் – பகலிரவு ஆட்டம் – முதலிரண்டு நாள்கள்

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளின் இரண்டாவது டெஸ்ட் – அடிலெய்ட்– பகலிரவு ஆட்டம் –...

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளின் இரண்டாவது டெஸ்ட் – அடிலெய்ட் – பகலிரவு ஆட்டம் – முதலிரண்டு நாள்கள்

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளின் இரண்டாவது டெஸ்ட் – அடிலெய்ட்– பகலிரவு ஆட்டம் –...