முத்தலாக் பிசாசுக்கு முடிவு கட்டிய மோடிக்கு ராக்கி அனுப்பும் முஸ்லிம் பெண்கள்!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

muslim women rakkhi - 2026உத்தரப் பிரதேசத்தில் பிரதமர் மோடியின் தொகுதியான வாராணசியைச் சேர்ந்த முஸ்லிம் பெண்கள், மோடிக்கு சகோதரத்துவத்தைக் காட்டும் ராக்கி கயிறு தயாரித்து அனுப்பியுள்ளனர்.

முத்தலாக் நடைமுறையை ரத்து செய்யும் மசோதாவை பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் உறுதியாகக் கொண்டு வந்து நிறைவேற்றியதை வரவேற்கும் வகையில், ராக்கி கயிறு அனுப்பியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வாராணசியின் ராம்பூரா பகுதியை சேர்ந்த ஹூமா பானோ கூறுகையில், பிரதமர் மோடியால்தான் முத்தலாக் முறை குற்றம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. அவர் நம் நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம் பெண்களுக்கும் மூத்த சகோதரர் போன்றவர். எங்களது சகோதரருக்கு நாங்கள் ராக்கி கயிறு அனுப்பியுள்ளோம் என்றனர்.

muslim women rakkhi1 - 2026இருப்பினும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இதனை ஒரு விளம்பர உத்தி என்று கூறியுள்ளது. அக்கட்சியின் மதீன் கான் இது குறித்துக் கூற போது, ஆர்.எஸ்.எஸ்., தொடர்புள்ள இஸ்லாமிய அமைப்பு இது போன்ற நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இது அவர்களுக்கு கொடுக்கப்பட்ட நெருக்குதல். அரசின் விளம்பர உத்தி என்று கூறியுள்ளார்.

சகோதரத்துவத்தை உணர்த்தும் ரக்ஷா பந்தன் விழா, நாடு முழுவதும் வரும் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.