லடாக் எல்லையில் பாகிஸ்தான் போர் விமானங்கள்; பதற்றம் அதிகரிப்பு…!

அடடே... அப்படியா? இந்தியா உலகம் பொது தகவல்கள்

pak - 2026

லடாக் பகுதிக்கு அருகிலுள்ள சகார்டு பகுதியில் பாகிஸ்தான் போர் விமானங்களை நிறுத்தியுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை இந்தியா கடந்த 6ஆம் தேதியில் நிறைவேற்றியது.

இதன்படி ஜம்மு-காஷ்மீர் பகுதி சட்டப்பேரவை கொண்ட யூனியன் பிரதேசமாகவும், லடாக் பகுதி யூனியன் பிரதேசமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த நடைமுறை வரும் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.

இந்நிலையில் இந்த சட்டத்திற்கு கடும் எதிரப்பு தெரிவித்து வந்த பாகிஸ்தான் தற்போது லடாக் பகுதிக்கு அருகில் உள்ள தன்து விமானப்படை தளத்தில் போர் விமானங்களை கொண்டு வந்து நிறுத்தி உள்ளது.

porvemanam - 2026

அதாவது லடாக் பகுதிக்கு அருகிலுள்ள சகார்டு பகுதியிலுள்ள பாகிஸ்தான் விமானப்படை தளத்திற்கு சில போர் விமானங்கள கொண்டு சென்றுள்ளது.

பாகிஸ்தான் தனது ஜெ.எஃப்-17 ரக போர் விமானத்தை அங்கு கொண்டு நிறுத்தியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தான் இந்த நகர்வை இந்திய புலனாய்வு அமைப்புகள் மற்றும் இந்திய இராணுவம் தீவிர கண்காணித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

எனினும் அங்கு இராணுவ ஒத்திகை நடைபெற உள்ளதாக பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிடதக்கது.

இதனால் லடாக் எல்லை பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.