சுபாஷிதம்: அன்பை விரும்புபவரின் அடையாளம்!

Published:

subhashitam-1
subhashitam-1

சுபாஷிதம் | ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்!

தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

48. அன்பை விரும்புபவரின் அடையாளம்.

செய்யுள்:

ததாதி ப்ரதி க்ருஹ்ணாதி குஹ்யாமாக்யாதி ப்ருச்சதி |
புங்க்தே போஜயதே சைவ ஷட்விதம் ப்ரீதிலக்ஷணம் ||

பொருள்:

கொடுப்பது, கொடுப்பதை வாங்கிக் கொள்வது, ரகசியங்களை பகிர்வது, கேட்டுத் தெரிந்து கொள்வது, உணவளிப்பது, அளிக்கும் உணவை ஏற்பது இந்த ஆறு குணங்கள் அன்பின் அடையாளங்கள்.

விளக்கம்:

பிறருக்கு கொடுப்பதில் இருக்கும் இன்பம் வேறு எதிலும் இல்லை என்பார்கள்.  நண்பர்களின் இடையே நடக்கும் கொடுக்கல் வாங்கல்களை குறிப்பால் உணர்த்தும் சுலோகம் இது. அன்பு கொண்ட இருவரிடையே இருக்கும் தொடர்பை அழகாக வர்ணிக்கிறது இந்த ஸ்லோகம்.

நண்பர்கள் இடையே நடக்கும் விவகாரங்களை மூன்று இரட்டைகளாக வர்ணிக்கிறார் கவி. இருவரிடையே ஒளிவு மறைவின்றி பரஸ்பர கொடுக்கல் வாங்கல் இருக்க வேண்டும் என்ற செய்தி இதில் உள்ளது. ஒருதலைப்பட்சமாக இல்லாத நட்பு மட்டுமே நீடிக்கும். நண்பனின் வீட்டுக்குச் சென்றோமா? அவனை அழைத்து உணவளித்தோமா? நண்பனின் வளர்ச்சிக்குத் தேவையான உதவிகளைச் செய்தோமா? அவனுடைய பிரச்சினைகளைப் பற்றி தெரிந்து கொண்டோமா? என்று நம்மை நாம் வினா எழுப்பி கொள்ளத் தூண்டும் சுலோகம் இது.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img