வீட்ல சிம்பிளா இத மட்டும் செய்ங்க… எவ்ளோ பலன் தருதுன்னு நீங்களே உணர்வீங்க!

ஆன்மிகக் கட்டுரைகள் ஆலோசனைகள் சுய முன்னேற்றம் ஜோதிடம் லைஃப் ஸ்டைல்

vilakku - 2026

மன அமைதி, பொறுமை, மனதுக்குள் சந்தோஷம், உலகியல் துன்பங்களில் இருந்து விடுதலை என நிம்மதியான வாழ்க்கையை நீங்கள் விரும்புகிறீர்களா? அப்படி எனில் இந்த முயற்சியைக் கைவிடாமல் செய்து பழகுங்கள். வீட்டில் எல்லோரும் செய்யக்கூடிய ஓர் எளிய முறை இது.

நாம் நம் பூஜை அறையில் தினமும் தீபம் ஏற்றுவோம். அந்த தீப ஒளியை தினமும் 15 நிமிடம் பார்த்து வந்தால் போதும்… பல நன்மைகளை அடையலாம்.!

அந்த தீபத்தில் இருந்து வரும் ஒளியை கண் அசைக்காமல் பார்க்க வேண்டும். அப்படிப் பார்க்கும் போது, நமது மனமும் அடங்கும்! கண்களுக்கும் மிகவும் நல்லது.

கிட்டப் பார்வை மற்றும் தூரப் பார்வை, கண் எரிச்சல் போன்ற கண் நோய்கள் சரியாகும். எவ்வளவு மனம் பாரமாக இருந்தாலும் சரி… மன பாரம் குறைந்துவிடும்.

நமக்குள் உழன்று கொண்டிருக்கும் பல பிரச்னைகளுக்கு பதில் கிடைக்கும் என்பது  அனுபவ உண்மை. நமக்கே தெரியாமல் நிறைய சக்திகள் நமக்கு கிடைக்கும். அந்த சக்தி என்ன மாற்றத்தை தரும் தெரியுமா?

1.மனக் கவலை தூள் படும்
2.முடிவு எடுக்கும் திறன் ஏற்படும்
3.கண்கள் புத்துணர்ச்சி பெறும்
4.நாம் புதிய தெம்புடன் காணப்படுவோம்
5.ஆசைகள் நம்மை அடக்குவது போய், நாம் ஆசைகளை அடக்கிவிடுவோம்
6.ஒரு புதிய மனிதராய் காணப்படுவோம்
7.ஒற்றைத் தலைவலி சரியாகும்

என்ன தயார் ஆய்டீங்களா? தினமும் குறைந்தது 15 நிமிடம் அதற்கு மேலும் செய்யலாம். தொடர்ந்து செய்து வாருங்கள். பலன் நிச்சயம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.