பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு டிஆர்டிஓ-வில் வேலை !

Published:

web Employment story - 2026

மத்திய பாதுகாப்புத்துறையான டிஆர்டிஓ (DRDO)-வில், டெக்னீசியன் – ‘A’ பிரிவு பணிகளில் பணிபுரிவதற்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணிகள்:
டெக்னீசியன் – ‘A’ பிரிவு பணிகள்

காலிப்பணியிடங்கள்:

மொத்தம் = 351 காலிப்பணியிடங்கள்

முக்கிய தேதிகள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி: 03.06.2019

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.06.2019

வயது வரம்பு:

குறைந்தபட்சமாக 18 வயது முதல் அதிகபட்சமாக 28 வயது வரை இருக்க வேண்டும்.

ஊதியம்:

தொடக்க ஊதியமாக, ரூ.28,000 மாதச் சம்பளம் வழங்கப்படும்.

தேர்வுக்கட்டணம்:

எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / பெண்கள் / PWD / ESM போன்றோருக்கு தேர்வுக்கட்டணம் கிடையாது.

எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / பெண்கள் / PWD / ESM போன்றோர் தவிர மற்ற பிரிவினர் – ரூ.100

கல்வித்தகுதி:

குறைந்தபட்சமாக, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அல்லது அதற்கிணையான படிப்பில் தேர்ச்சி மற்றும் ஐடிஐ பயிற்சி சான்றிதழ் படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

ALSO READ:  மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில், https://www.drdo.gov.in/drdo/ceptam/ceptamnoticeboard.html# – என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை:

  1. கம்ப்யூட்டர் வழித்தேர்வு
  2. ட்ரேடு டெஸ்ட் (Trade Test)

மேலும், இது குறித்த முழுத் தகவல்களை பெற,
https://www.drdo.gov.in/drdo/ceptam/download/advttech09.pdf – என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Related articles

Recent articles

spot_img