தமிழக அரசு துறைகளில் பொறியியல் படித்தவர்களுக்கு வேலை

Published:

web Employment story - 2026

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தமிழக அரசின் கீழுள்ள பல்வேறு துறைகளில் பணிபுரிவதற்கான ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணிகள்: (ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள்)
அசிஸ்டெண்ட் எலக்ட்ரிக்கல் இன்ஸ்பெக்டர்
அசிஸ்டெண்ட் இன்ஜினியர்
ஜூனியர் ஆர்க்கிடெக்ட்

காலியிடங்கள்:

அசிஸ்டெண்ட் எலக்ட்ரிக்கல் இன்ஸ்பெக்டர் – 10

அசிஸ்டெண்ட் இன்ஜினியர் – 450

ஜூனியர் ஆர்க்கிடெக்ட் – 15

மொத்தம் = 475 காலியிடங்கள்

முக்கிய தேதிகள்:

அறிவிப்பு வெளியான தேதி: 29.05.2019

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.06.2019

வங்கி மூலம் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி தேதி: 30.06.2019

தேர்வு நடைபெறும் தேதிகள்:

தாள்-1: 10.08.2019 (காலை)
தாள்-2: 10.08.2019 (மதியம்)

வயது வரம்பு: (01.07.2019 தேதிக்குள்)
அசிஸ்டெண்ட் எலக்ட்ரிக்கல் இன்ஸ்பெக்டர் என்ற பணிக்கு, அதிகபட்ச வயது வரம்பாக 39 வயதும், மற்ற பணிகளுக்கான அதிகபட்ச வயது வரம்பாக 30 வயதும் உடையவர்களாக இருத்தல் அவசியம்.

ALSO READ:  ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

கட்டணம்:

விண்ணப்ப பதிவு கட்டணம் – ரூ.150

தேர்வுக்கட்டணம் – ரூ.200

குறிப்பு:

ஆன்லைன் மற்றும் வங்கியில் மட்டுமே இதற்கான தேர்வுக்கட்டணத்தை செலுத்த முடியும்

கல்வித்தகுதி:

குறைந்தபட்சமாக, பி.எஸ்சி (அக்ரிகல்சர்) / பி.இ / பி.டெக் (அக்ரிகல்சர், சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்டஸ்ரியல், ஆர்க்கிடெக்சர், கெமிக்கல், ஆட்டோமொபைல்) போன்ற ஏதேனும் ஒரு துறைகளில் பயின்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

குறிப்பு:

விண்ணப்பதாரர்கள், தமிழில் நன்கு எழுத, படிக்க தெரிந்திருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில், http://tnpscexams.in/ – என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.

தேர்வு முறை:

  1. எழுத்துத் தேர்வு (தாள்-1 & தாள்-2)
  2. நேர்முகத் தேர்வு

மேலும், இது குறித்த முழுத் தகவல்களைப் பெற,
http://www.tnpsc.gov.in/Notifications/2019_18_NOTIFN_CESE.pdf – என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Related articles

Recent articles

spot_img