December 5, 2025, 7:42 PM
26.7 C
Chennai

” தோ பாரு, நான் உருப்பட மாட்டேன், உன்னையும் உருப்பட விட மாட்டேன்”( ரா கணபதியைப் பார்த்து பெரியவா)

” தோ பாரு, நான் உருப்பட மாட்டேன், உன்னையும் உருப்பட விட மாட்டேன்”( ரா கணபதியைப் பார்த்து பெரியவா)

( எதையும் பத்தி யோசிச்சு குழப்பிக்காதே. ஏன்னா உனக்கு ஒண்ணுமே புரியாது, புரிஞ்சுக்க முடியாது உடம்பை பிழியறதுக்கு ஏதாவது கர்மா பண்ணனும். உனக்கு எழுத்துங்கற கர்மா அமைஞ்சிருக்கு. ‘தேமே’ ன்னு அதை பண்ணிண்டு இரு. நல்ல விஷயம்தான்னாலும் எழுதறது பிடிக்கல, சரிதான். பிடிக்காட்டா பரவாயில்ல, எழுத முடியற வரைக்கும் எழுதிண்டு இரு )

சொன்னவர்; ரா கணபதி.தீபாவளி கல்கி சிறப்பு மலரில் சில பகுதிகள். நன்றி-கார்த்தி நாகரத்தினம்

எதுலயும் மனசு ஒட்டல. நல்ல விஷயத்தை தான் எழுதறோம்ன்னாலும் எதுக்கு எழுதணும்ன்னு தான் தோண்றது. எதுவுமே வேண்டியிருக்கல, சந்நியாசம் வாங்கிண்டு போயிடணும் ன்னு தான் இருக்கு. நிறைய தடவை பெரியவா கிட்ட கேட்டாச்சு. இந்த தடவையாவது பெரியவா அதுக்கு அனுக்கிரகம் பண்ணனும்’.
பெரியவா முகத்தில் தவழ்ந்த புன்னகை சிரிப்பாக மாறியது. ‘நான் இங்கே ஒக்காந்துண்டு மடத்தை பரிபாலனம் பண்றேங்கற பேர்ல ஏதேதோ காலட்சேபம் பண்ணி, வயிறு வளத்துண்டு உருப்படாம இருப்பேனாம். ஆனா நீ என்னடான்னா என்னை விட்டுட்டு ஓடி போயி ஹிமாச்சலத்திலே உக்காந்துண்டு தபஸ் பண்ணி மோட்சத்துக்கு போகணுமாம், தோ பாரு, நான் உருப்பட மாட்டேன், உன்னையும் உருப்பட விட மாட்டேன்.’

நிதானமாக எழுந்த பெரியவா அந்த இடத்தை விட்டு அகன்றார். தீர்மானத்துடன் வந்த மனிதரின் மனத்தில் தாங்க முடியாத ஏமாற்றம்.

‘என்னை ஆங்கில மோகத்தில் வீழ்ந்து விடாமல் சரியான நேரத்தில் தடுத்து ஆட்கொண்ட குருநாதர், எனது ஒவ்வொரு சிறிய பெரிய விஷயத்திலும் என்னை வழி நடத்தி வருபவர், சந்நியாச விஷயத்தில் மட்டும் எனக்கு பிடி கொடுக்காமலேயே பேசி வருகிறாரே’ அவர் மனத்தில் தோன்றியது ஏமாற்றம் மட்டுமல்ல, கோபமும் தான்.

‘எம் மேலே கோபமா’.

ஆம் என்று எப்படி சொல்வது?

எனவே மௌனம் தொடர்ந்தது.

‘எதையும் பத்தி யோசிச்சு குழப்பிக்காதே. ஏன்னா உனக்கு ஒண்ணுமே புரியாது, புரிஞ்சுக்க முடியாது உடம்பை பிழியறதுக்கு ஏதாவது கர்மா பண்ணனும். உனக்கு எழுத்துங்கற கர்மா அமைஞ்சிருக்கு. ‘தேமே’ ன்னு அதை பண்ணிண்டு இரு. நல்ல விஷயம்தான்னாலும் எழுதறது பிடிக்கல, சரிதான். பிடிக்காட்டா பரவாயில்ல, எழுத முடியற வரைக்கும் எழுதிண்டு இரு. போதும்’ கனிவுடன் தொடர்ந்தார் பெரியவா,

‘ஒண்ணையும் போட்டு யோசிச்சு கொழப்பிக்காதே. ஒண்ணுமே புரியாது. புரிஞ்சுக்க முயற்சியும் பண்ணாத’.

அந்த மனிதரின் பெயர் ரா.கணபதி போன தீபாவளி கல்கி சிறப்பு மலரில் சில பகுதிகள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories