சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடாதிபதியின் தமிழக விஜய யாத்திரை!

Published:

சென்னை”

சிருங்கேரி சாரதா பீடாதிபதி ஜகத்குரு பாரதி தீர்த்த மகாசுவாமிகள் மற்றும் அவரது சீடர் விதுசேகர பாரதி சுவாமிகள் ஆகிய இருவரும் தமிழகத்தில் ஒருமாத காலம் விஜய யாத்திரை மேற்கொள்கின்றனர். பாரதி தீர்த்த மகாசுவாமிகளின் 67-வது பிறந்தநாள் விழா மதுரையில் கொண்டாடப்பட உள்ளது.

இது தொடர்பாக கர்நாடகாவில் உள்ள சிருங்கேரி சாரதா பீட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி:

சிருங்கேரி பீடத்தின் 36-வது பீடாதிபதியாக இருப்பவர் பாரதி தீர்த்த மகாசுவாமிகள். இவர் 2012-ல் தமிழகத்தில் நீண்டநாட்கள் விஜய யாத்திரை மேற்கொண்டார்.

கடந்த 2015-ல் விதுசேகர பாரதி சுவாமிகளை தனது சீடராக நியமித்தார். இந்நிலையில், தமிழக பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று, இருவரும் சேர்ந்து முதல் முறையாக தமிழகத்துக்கு விஜய யாத்திரை மேற்கொள்கின்றனர்.

மார்ச் 9-ம் தேதி தொடங்கி கர்நாடகாவின் பல பகுதிகளுக்குச் செல்லும் அவர்கள் மார்ச் 14-ம் தேதி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்துக்கு வருகை தருகின்றனர்.
14, 15-ல் சத்திய மங்கலம்
16, 17-ல் கோபி செட்டிபாளையம்,
18-ல் ஈரோடு,
19, 20, 21-ல் சேலம்,
22-ல் நாமக்கல்,
23, 24-ல் திண்டுக்கல்,
25-ல் தென்கரை,
26-ல் கொடிமங்கலம் என்று பல்வேறு ஊர்களுக்கு விஜயம் செய்து,
27-ம் தேதி மதுரை வந்தடைகின்றனர். தங்கும் இடங்களில் ஸ்ரீசாரதா சந்திரமவுலீஸ்வர பூஜை நடத்து கின்றனர்.

ALSO READ:  சதுரகிரி கோவிலுக்கு தாணிப்பாறை வழியாக மட்டும் செல்ல வேண்டும்: ஆட்சியர் உத்தரவு!

மதுரையில் பிறந்தநாள் விழா:

மதுரை பைபாஸ் சாலையில் உள்ள சிருங்கேரி சங்கர மடத்தில் ஏப்ரல் 3-ஆம் தேதி வரை ஒருவார காலம் தங்கியிருந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குகின்றனர்.
ஏப்ரல் 2-ம் தேதி பாரதி தீர்த்த சுவாமிகளின் 67-வது பிறந்தநாள் விழா மதுரையில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மகாருத்ரம், சதசண்டி யாகங்களும் நடக்க உள்ளன.

ஏப்ரல் 4-ம் தேதி புறப்பட்டு ராஜபாளையம் செல்லும் அவர்கள், அங்குள்ள ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்த பாரதி வேத பாடசாலையில் 13-ம் தேதி வரை தங்கியிருந்து அருளாசி வழங்குகின்றனர்.

இந்த விஜய யாத்திரையின்போது மார்ச் 15-ல் சத்தியமங்கலம் ஆதிசங்கரர் கோயில் கும்பாபி ஷேகம், 18-ம் தேதி பவானி சிருங்கேரி மட பிரவசன மண்டப திறப்பு விழா, ஏப்ரல் 9-ம் தேதி ராஜபாளையம் சாரதாம்பாள் கோயில் கும்பாபிஷேகம் ஆகியவற்றையும் நடத்தி வைக்கின்ற னர்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img