ஸ்ரீரங்கத்தில் தங்க கருட வாகனத்தில் நம்பெருமாள் உலா!

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் சற்றுமுன் திருச்சி விழாக்கள் விசேஷங்கள்
srirangam garuta1 - 2026

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் தைத்திருவிழா உத்ஸவம் நடைபெற்று வருகிறது. இதில் பெருமாள் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலித்தார்.

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயத்தில், தைத்தேர் திருவிழா கடந்த ஜனவரி 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ரங்கநாதர் ஆலயத்தில் நம்பெருமாள் தங்க கருடவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

srirangam garuta - 2026

மாம்பழச்சாலை அருகில் உள்ள வீரேஸ்வரம் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து தங்க கருடவாகனத்தில் நம்பெருமாள் அம்மா மண்டபம், ஸ்ரீரங்கம் வழியாக வீதி உலா வந்தார். ஏராளமான பக்தர்கள் நம்பெருமாளை தரிசித்து மகிழ்ந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.