கரூர் மாவட்டம்,முத்தூர், சென்னாகல்மேடுஆவித்திப்பாளையத்தில் வேகமாக சென்ற லோடு ஆட்டோ கட்டுப்பாட்டு இழந்து கிணற்றுக்குள் பாய்ந்ததில் ஆட்டோ வில் சென்ற தம்பதியர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புகளூர் ஆவித்திபாளையத்தை சேர்ந்த வடிவேல்50.இவரது மனைவி பானுமதி, 45. இந்த தம்பதியருக்கு, அகல்யா12, என்ற மகள் உள்ளார். வடிவேல் கோவில் விழாக்களில் மேடை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
திருப்பூர் மாவட்டம், சின்னமுத்தூர் செல்லாண்டியம்மன் கோவில் திருவிழாவில் மேடை அமைத்திருந்த அவர், விழா முடிந்ததும் மேடைகளை அப்புறப்படுத்தும் பணிகளை முடித்து விட்டு இன்று காலை சரக்கு ஆட்டோவில் மேடை பொருட்களை ஏற்றிக்கொண்டு ஊருக்கு மனைவி, மகளுடன் திரும்பி கொண்டிருந்தனர்.
முத்தூர், சென்னாகல்மேடு அருகே சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, ரோட்டோரம் இருந்த ராமலிங்கம் என்பவரின் தோட்டத்து கிணற்றுக்குள் பாய்ந்தது. கிணற்றில், 60 அடிக்கு தண்ணீர் இருந்த காரணத்தால் ஆட்டோ தண்ணீரில் மூழ்கியது. இதில், வடிவேல், பானுமதி, அகல்யா ஆகிய 3 பேரும் மூழ்கினர். அதிர்ஷ்டவசமாக, அகல்யா நீச்சல் அடித்து, கிணற்றின் மேல் ஏறி சென்றார். தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த விவசாயிகள், பொதுமக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தம்பதியரை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




