திருவுளச் சீட்டு போட்டுப் பார்ப்பது சரியா?

திருவுளச் சீட்டு போட்டுப் பார்ப்பது சரியா?

(தெளிவான வழி தெரியாத போது,இக்கட்டான சந்தர்ப்பத்தில் திருப்திகரமான முடிவு எட்ட முடியாத போது, நடுநிலைமை தவறி தீர்மானம் செய்யக்கூடும் என்ற நிலை வரும்போது)

(அர்ஜுனனை முன்னிறுத்தி மனித சமுதாயத்துக்கே கீதாசார்யன் வழி காட்டியது போல-பெரியவாளின் உபதேசம் என்பது தெள்ளத் தெளிவு)


சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

பெரியவாளிடம் அபார பக்தி கொண்டிருந்த ஒருவர், பொருள் வசதி இல்லாமலிருந்தார்.

அவருடைய பெண்ணுக்குக் கல்யாணம் நிச்சயமாயிற்று.

பணத்துக்கு எங்கே போவார்?

பெரியவாளிடம் வந்து பிரார்த்தனை செய்தார்.

“விவாகத்துக்கு இன்னும் கொஞ்ச நாள் இருக்கே. கவலைப்பட வேண்டாம்” என்று சொல்லி அவரை அனுப்பி வைத்தார்கள், பெரியவா.

பின்னர் ஒரு சிஷ்யரை, சென்னையிலிருந்த ஒரு பக்தரிடம் அனுப்பினார்கள். இந்த பக்தர் செல்வந்தர்.அத்துடன் பெரியவா உத்தரவுப்படி பல பேர்களுக்கும் அவ்வப்போது உதவி செய்யும் இயல்புடையவர்.

சிஷ்யர் சென்று விவரம் கூறியபிறகு, சிறிது தொகையை கொடுத்தார் அவர்.

ALSO READ:  ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

கல்யாணத்துக்கு ரொம்பச் செலவாகும். ஐநூறு ரூபாய் போறாது..” என்றார் சிஷ்யர்.

“இதைப் பாருங்கோ…நான் என்ன செய்தேன் தெரியுமோ?… ரூபாய், இருநூறு,ஐநூறு,ஆயிரம் என்று,ஐயாயிரம் வரை சீட்டில் எழுதி,ஸ்வாமி முன்னே போட்டு, பேத்தியை விட்டு ஒரு சீட்டு எடுக்கச் சொன்னன். ஐநூறு ரூபாய் சீட்டுத் தான் வந்தது. அந்தத் தொகையைக் கொடுத்து விட்டேன்” என்றார் செல்வந்தரான பக்தர். 

சிஷ்யர் திரும்பி வந்து பெரியவாளிடம் விபரம் கூறினார்.

பெரியவா சொன்னார்கள்

“திருவுளச் சீட்டு போட்டுப் பார்ப்பது என்று ஒரு பழக்கம் இருக்கு. ஆனா, எப்போ திருவுளச் சீட்டு போட்டு தெய்வத்தினுடைய, திருவுள்ளத்தை அறியணும்?.

“ஒரு பிரச்னையிலே தெளிவான ஒரு வழி நமக்குத் தெரியாதபோது…ஒரு இக்கட்டான சந்தர்ப்பத்தில், சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் திருப்தியான ஒரு முடிவு எட்ட முடியாத போது…ஒருத்தர் நடுநிலைமை தவறி தீர்மானம் செய்யக்கூடும் என்ற சந்தேகம் வரக்கூடிய போது…இப்படிப்பட்ட நிலைமைகளில் பகவானுடைய உத்தரவைக் கேட்டு போடப்படும் திருவுளச் சீட்டுக்கு மதிப்பு உண்டு”

“சென்னை அன்பருக்கு நான் தான் குரு. நான் சொன்ன பிறகு, இவர் ஏன் சீட்டுப் போட்டுப் பார்க்கணும்?.தன்னால் முடிந்த அதிகபட்ச அளவு உதவி செய்ய வேண்டியது தானே?

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூன் 8 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

“இவருடைய சம்சாரம் கர்ப்பமாக இருக்கிறாள் என்று  வைத்துக்கொள்வோம். பெண் பிறக்குமா? ஆண் பிறக்குமா?…. என்று . சீட்டு எழுதிப் போட்டுப் பார்ப்பாரா? அப்படியே செய்தாலும் சீட்டிலிருந்தபடியே நடக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? ஆண் என்று சீட்டில் வந்து பெண் பிறந்தால் அந்தக் குழந்தையையோ,  ஈசுவரனையோ  திரஸ்காரம் பண்ணிடுவாரா?”

“கோர்ட்டில் கேஸ் நடக்கிறது.தீர்ப்பு தனக்குச் சாதகமா? விரோதமா? என்று சீட்டுப் போட்டு பார்ப்பாரா? ஒரு ஜட்ஜ்மெண்டில் சாதகம் – பாதகம் இரண்டுமே கூட இருக்கும்.

“சீட்டுப் போட்டுப் பார்ப்பது, ஒரு குழப்பமான சந்தர்ப்பத்தில் செய்ய வேண்டியது.அதுவும் கூட சர்வ சாமானியர்கள் செய்யக் கூடியது. இவர் நிறையப் படித்தவர்.தெய்வ பக்தி – குரு பக்தி உள்ளவர். ஒரு ஏழை வீட்டுக்குக் கல்யாணத்துக்குப் போதுமான உதவி செய் என்று நான் சொன்னால் அதை அப்படியே செய்ய வேண்டியது தானே? குழப்பம்,இக்கட்டு அஸ்பஷ்டம் எங்கே வந்தது?,,,,,”

இவ்வளவு நீளமான விளக்கத்தைக் கேட்டு, அங்கிருந்தவர்களுக்கெல்லாம் பேராச்சர்யமாக இருந்தது.ஆனால் இந்த நீண்ட உபதேசம் சென்னை அன்பரை முன்னிட்டு,சிப்பந்திகளுக்கும்,மற்றவர்களுக்கும் செய்யப்பபட்ட ஒரு வழிகாட்டுதல்.,

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூன் 13 - சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

அர்ஜுனனை முன்னிறுத்தி, மனித சமுதாயத்துக்கே கீதாசார்யன் வழி காட்டியதைப் போல – என்பது தெள்ளத் தெளிவு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories