
ஒரு முறை ஒரு சிஷ்யர் மகா சன்னிதானம் அவர்களிடம் வாழ்வின் நித்திய கர்மா அனுஷ்டானங்களை கடைபிடிப்பது பற்றி கேள்வி எழுப்பினார் சிஷ்யர்:
திரிகால சந்தியாவந்தனம் செய்ய வேண்டிய அவசியத்தை உணருகிறேன் தினம் காலை 9 மணிக்கு வேலைக்கு போக வேண்டும் வீட்டிலிருந்து ஆபீசுக்கு செல்ல ஒரு மணி நேரம் ஆகிறது அதற்குள் காலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்து நீராடி உணவருந்தி உடையணிந்து புறப்பட வேண்டும் அதனால் சந்தியாவந்தனம் செய்ய அவகாசம் இல்லை என்றார்்
மகா சன்னிதானம் :காயத்ரி ஜெபம் 108 ஆவர்த்தியுடன் ப்ராத சந்தியாவந்தனம் செய்ய 10 நிமிஷங்கள் போதுமே
சிஷ்யர் :
அவ்வளவு கூட அவகாசம் இல்லை
மகாசன்னிதானம் :
32-ஆவது ஜெபம் செய்யுங்கள் 5 நிமிஷங்கள் போதும் அதுவும் செய்ய முடியாத நாட்களில் 10 ஆவர்த்தி ஜபம் செய்யுங்கள் ஆனால் அதைவிட குறைவாக செய்ய இடமே இல்லை சந்தியாவந்தனம் ஒரு பிராமணன் செய்ய வேண்டிய மிக முக்கிய நித்ய கர்மா அதை செய்தே தீரவேண்டும் பல பெரியோர்களின் அறிவுரையை கருத்தில் கொண்டு இன்றைய சூழ்நிலையில் நாம் என்ன செய்யலாம் என்று சிந்திப்போம்
காலையில் சூரியன் உதிக்கும் முன் சுமார் ஐந்தரை மணிக்கு முன் துயில் எழ வேண்டும் இது நமக்கு மிக நன்மை பயக்கும் நாம் எல்லோரும் இதனை அறிந்திருந்தும் சிலரே இதை கடைபிடிக்கிறோம்
காலைக்கடன் முடித்து நீராடி சந்தியாவந்தனம் செய்த பின் பால் அல்லது காபி அருந்தலாம் அல்லது குறைந்தபட்சம் தந்த சுத்தி செய்து கை கால் கழுவி நெற்றிக்கு இட்டுக் கொண்டு சந்தியாவந்தனம் செய்தபின் அருந்தலாம் பிராமணர்
எல்லோரும் த்ரிகால ஸந்தியாவந்தனம் செய்ய வேண்டும் பிரம்மச்சாரி உபாகர்மம் காயத்ரி ஜபம் போன்ற விசேஷ தினங்களிலாவது ஸமிதா தானம் செய்ய வேண்டும். எல்லோரும் தன் பெற்றோர்களின் ஸ்ராத்தத்தை தவறாமல் செய்ய வேண்டும் ஸ்ரார்த்த தினம் போன்ற முக்கிய தினங்களில் கிரகஸ்தன் ஔபாசனம் செய்யவேண்டும்
பிராமணர் எல்லோரும் உபாகர்மத்தை விடாமல் அனுஷ்டிக்க வேண்டும் காயத்ரி ஜபம் அன்று ஆயிரத்தெட்டு காயத்ரி ஜபிக்கவேண்டும் தன் வேதத்தை முடிந்தவரையிலாவது அத்யயனம் செய்ய வேண்டும் யஜுர் வேதிகள் குறைந்தபட்சம் புருஷசூக்தம் ருத்ரம் சமகம் துர்கா ஸுக்தம் ஸ்ரீ சுக்தம் முதலியவற்றை கற்கலாம் சாம வேதிகள் ஸாமஸுக்த மஞ்சரியில் குறிப்பிட்டுள்ள முக்கிய ஸாமாக்களை கற்கலாம்
வைதீக பிரவிருத்தியில் இருக்கும் பிராமணர் தர்ம சாஸ்திர விதிகளை மிக கவனமாக பின்பற்ற வேண்டும் .ஒரு சிராத்ததில் பங்கு கொள்ளுதல் அடுத்த சிராத்தத்தில் பங்கேற்பதற்கு வேண்டிய இடைவெளி ப்ருதிகிரகம் அதிகம் வாங்கினால் அதன் தரத்திற்கு ஏற்ப செய்ய வேண்டிய பிராயச்சித்தம் முதலியவற்றிற்கு தர்ம சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட பிராயச்சித்தம் செய்யவேண்டும்
பூரணமாக வேதாத்யாணம் செய்த பிராமணன் மதிப்பிற்குரியவன் ஆனால் அந்த கௌரவத்தை அவன் காப்பாற்றிக் கொள்வது அவனது கடமை
அவன் அஸந்துஷ்டோ த்விஜோ நஷ்ட: என்பதை மனதில் கொள்ள வேண்டும். என்று சிங்கிரி ஸ்ரீஸ்ரீ மகாசன்னிதானம் அவர்கள்் நித்திய கர்மா அனுஷ்டானத்தை வலியுறுத்தி உபதேசம் வழங்குகிறார்கள் அவர்களின் மேலான கருத்தை பிற்றி பயன்டைவோம்.